Facebookல் Group உருவாக்குவது எப்படி?

866

 1,847 total views

Facebookன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக் காரணம் அதில் உள்ள பல வசதிகள் தான். அந்த வரிசையில் Facebookன் Group வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். நண்பர்களுக்குள் ஒரு குழு உருவாக்கிக் கொண்டு நீங்கள் விருப்பபட்டதை groupல் பகிரலாம்.  எப்படி Facebookல் group உருவாக்குவது என பார்ப்போம்.

Facebookல் Group உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயம் மொத்தமே 2 நிமிடங்கள் தான் ஆகும்.

  • முதலில் http://www.facebook.com/login.php சென்று  facebook தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
  • ஒரு window open ஆகும். அதில் உள்ள Create Group என்ற பட்டனை அழுத்துங்கள்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு Pop-up window open ஆகும். அதில் நீங்கள் ஆரம்பிக்கும் குழுமத்தின்(Group) விவரங்களை கொடுக்கவும்.

Group Name – குழுமத்தின் பெயர்

Members – இந்த பகுதியில் உங்களின் நண்பர்களை இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக ஆக்கலாம்.
Privacy
Open – இதை தேர்வு செய்தால் உங்களின் குழுமத்தையும், குழுமத்தில் உள்ள பதிவுகளையும் அனைவரும் பார்க்க முடியும். உறுப்பினர்களாக இல்லை என்றாலும் கூட இவைகளை பார்க்க முடியும்.
Closed – இதை தேர்வு செய்தால் அனைவரும் உங்கள் குழுமம் மற்றும் அதில் உள்ள உறுப்பினர்கள் ஆகியவற்றை பார்க்கலாம். ஆனால் குழுமத்தின் பதிவுகளை பார்க்க முடியாது. உங்கள் குழுமத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே இந்த பதிவுகளை பார்க்க முடியும்.
Secret– உறுப்பினர்கள் மட்டுமே இந்த குழுமத்தையும் குழுமத்தின் பதிவுகளையும் பார்க்க முடியும்.
இவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Create என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் குழுமம் தயாராகிவிடும். இனி அந்த குழுமத்தை உபயோகிக்க ஆரம்பியுங்கள்.

You might also like

Comments are closed.