Chrome-ல் ஏற்படும் Shockwave plug-in crashes பிழையை சரி செய்வது எப்படி?
1,616 total views
Google நிறுவனம் வழங்கும் Chrome browser தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்றவற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் Chrome browser. சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதனை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும். இந்த பிழையை எப்படி சரி செய்வது என பார்ப்போம்.
- இதுவரை உங்களுக்கு இந்தப் பிழை ஏற்ப்படவில்லை எனில் நீங்கள் எதுவும் மாற்றம் செய்ய வேண்டாம். பிழை ஏற்ப்படுபவர்கள் குரோம் உலவியை திறந்து address bar-ல் chrome://plugins என type செய்து enter கொடுக்கவும்.
- உங்களுக்கு ஒரு window open ஆகும். கீழே படத்தில் காட்டி இருக்கும் இடத்தில் உள்ள + Details என்பதை click செய்யவும்.


- Location என்பதில் உள்ள URL வைத்து இரண்டையும் சுலபமாக வேறுபடுத்தி பார்க்கலாம். மேலே படத்தில் காட்டியுள்ள (Chrome Internal Installation) பகுதியில் உள்ள Disable என்பதை click செய்யவும்.
- Disable click செய்தவுடன் உங்கள் window கீழே இருப்பதை போல இருக்கும்.
- Disable செய்தவுடன் உங்களுடைய window-வை மூடிவிட்டு திரும்பவும் open செய்து கொள்ளவும். இனி இந்த பிழை ஏற்படாது.
Comments are closed.