உங்கள் பயணத்தை மலிவான விலை கொண்டதாக்கிட தயாரிக்கப்பட்டுள்ளது Karhoo செயலி. ஆம் இந்த செயலியின் மூலம் ஆன்லைனில் நாம் ஒரு கால் டாக்சியை புக் செய்தால் இது அந்நகரில் உள்ள பல போக்குவரத்து நிறுவனங்களின் அன்றைய நிலையை அறிந்து எதில் பயணித்தால் விரைவான மற்றும் மலிவான பயணத்தை பெறலாம் என்பதை ஆராய்ந்து மக்களுக்கு அளிக்கிறது. இதனால் பயனர்கள் எளிதில் ஒரூ சுமூகமான பயணத்திற்கும் மலிவான பயணத்திற்கும் தயராகலாம். மேலும் ஒரு பகுதிக்கு நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஒட்டுனர்களிலிருந்து தரவுகளை ஆராய்ந்து அதன் பின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முடிவை தருகிறது. இந்த செயலி தற்போது லண்டனில் மட்டுமே கிடைக்கிறது. கூடிய விரைவில் சிங்கப்பூர் மற்றும் நியுயார்க் போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது போன்றே சிறந்த உணவகங்களை ஒப்பிடும் செயலிகள் மற்றும் ஆடைகள் வாங்கும் தளங்களை ஒப்பிடும் செயலிகள் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.
Prev Post
Next Post
You might also like
Comments are closed.