கணினி Registry Clean செய்ய Wise Registry Cleaner Free

912

 2,105 total views

நாம் கணினியில் சில மென்பொருட்களை install செய்திருப்போம். நாளடைவில் அது வேண்டாமென்று Uninstall செய்து விடுவோம். ஆனால் அப்படி செய்யும் போது சில தேவையில்லாத பைல்கள் நம் Registry-லேயே தங்கிவிடும்.  இதனால் தான் நம் கணினி மிகவும் மந்தமாக  வேலை செய்யும். இந்த பைல்களை அழித்தாலே நம் கணினியின் வேகத்தை கண்டிப்பாக  கூட்ட முடியும் என்பதில் ஐயமில்லை.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள link அழுத்தவும். http://www.wisecleaner.com/download.html

Download செய்தவுடன் உங்களுக்கு வரும் WDCfree என்ற setup file run செய்து install செய்து கொள்ளவும். உங்களுக்கு இரண்டு shortcut keys வந்திருக்கும். அதில் Clear with 1 click  என்பதை double click  செய்தாலே உங்கள் கணினியின் registry scan ஆகி அதில் உள்ள தேவையில்லாத பைல்கள் scan ஆகி தானாகவே பைல்களை delete செய்துவிடும்.

இந்த வேலைகளை Manual ஆக செய்ய வேண்டுமானால் Wise Registry Cleaner என்ற Shortcut கீயை double click செய்து இயக்கி இடது பக்க மூலையில் மேலே உள்ள Scan என்ற button அழுத்தினால் உங்களுடைய கணினி scan ஆகி  வந்ததும் நான்காவதாக உள்ள Fix என்ற button அழுத்தி உங்கள் கணினியை clean செய்து கொள்ளுங்கள்.

முன்னர் உங்கள் கணினி இயங்கியதற்கும் இப்பொழுது இயங்குவதற்கும் நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக தெரியும்.

 

You might also like

Comments are closed.