உலாவியாக செயல்படும் தேடியந்திரம்
1,412 total views
SLIKK என்று புதிதாக அறிமுகமாகி உள்ள தேடியந்திரம் தேடியந்திரமாக மட்டுமல்லாமல் அதுவே உலாவியாகவும் செயல்படக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டில் தேடலை எடுத்து செல்வதாக கூறிக் கொள்ளும் SLIKK உலகின் முதல் தேடல் உலாவி என்று அழைத்து கொள்கிறது.
வழக்கமாக கூகுள் போன்ற தேடியந்திரத்தில் நுழைந்து குறிச் சொல்லை type செய்து தேடுவீர்கள். அதன் பிறகு எந்த தேடல் முடிவை பார்க்க வேண்டுமோ அதில் click செய்தால் தனியே இன்னொரு இணைய பக்கம் தோன்றும். அடுத்த முடிவு தேவை என்றால் மீண்டும் ஒரு click செயதால், மீண்டும் ஒரு window open ஆகும். இவ்வாறு தான் நாம் தகவல்களை தேடுகிறோம்.
இப்படி ஒவ்வொரு இணையதளமாக செல்வதற்கு பதில் எந்த பக்கத்தில் தேடுகிறோமோ அதே பக்கத்திலேயே புதிய இணைய பக்கத்தை பார்த்து விடலாம். தேடல் முடிவுகளில் எதன் மீது click செய்தாலும் அதற்கான இணையதளம் அதே பக்கத்தில் அருகில் தோன்றுகிறது. ஆகவே தேடல் பக்கத்தில் இருந்து வெளியேறாமலே தேடல் முடிவுகளை பார்க்கலாம். அதே போல தேவைப்பட்டால் ஒரே பக்கத்தில் பல வகையான முடிவுகளையும் பார்க்க முடியும்.
இணையதள முகவரி – http://www.slikk.com/default.aspx
Comments are closed.