அதிக ஸ்டாக் வைத்திருந்த காரணத்தினால் ஐபோன் 6S களின் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ள ஆப்பிள்:

ஐபோன் 6Sகளின்  தேவை  குறைந்ததை  ஒட்டி    கடைகளில்    அதிகளவு  போன்கள்  கிடப்பில் உள்ளன.   இதையொட்டி ஆப்பிள் அதன் சாதனங்களின்  உற்பத்தியை  குறைக்க முடிவு செய்துள்ளது. ஆப்பிள் கடந்த செப்டம்பர் மாதம் ஐபோன் 6S களை  வெளியிட்ட  நேரத்தில்  அதனை மலை போல் குவித்து விற்பனை செய்தது. தற்போது கடைகளில் அதிகளவு மொபைல்களில்  விற்காமல் இருப்பதால்   விநியோகஸ்தர்கள் மூலமாக பங்குதாரர்களிடம் மிச்சமுள்ள ஸ்டாக்குகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

images

இதனால் அடுத்தபடியாக தயாரிக்கவிருக்கும் மொபைல்  சாதனங்களில்  அதன் உற்பத்தியை  30சதவீதம்   குறைக்க முடிவு செய்துள்ளனர். இதுபோன்றே  உலகின்  மிகபெரிய  உற்பத்தியாலர்களான tech behemoth, Foxconn, போன்ற நிருவனங்கலும்  அதன் வேலை செய்யும் நேரத்தை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆப்பிள் வராலாற்றில், அறிமுகம் செய்யப்பட்ட மொபைல் சாதனத்தினை சந்தைக்கு வந்த பின்னர்  அதன் உற்பத்தியை குறைத்தது இதுவே முதல் முறையாகும். கடந்த வருடம் ஐபோன்களுக்கு  மங்களகரமான ஆண்டாக அமையவில்லை என்பதுதான் உண்மை. இந்த வீழ்ச்சியை ஆப்பிள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சரி  செய்து விடும் என தெரிவித்துள்ளது .வருகிற நிதியாண்டில் ஆப்பிள் அதன் வருவாய் வளர்ச்சியினை  சராசரியாக  28%தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply