2016 லிருந்து வெப் கேமேரா நுட்பத்தை நீக்க உள்ள யூ-டியூப் :

ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் டியூபினை பயன்படுத்தி  வருகின்ற நிலையில்  2016 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து  யூ-டியூபின்   வெப் கேமரா நுட்பத்தை மட்டும் நீக்க உள்ளது .இந்த நுட்பத்தின் உதவியால் மேலும்   தற்போது வெப் கேமரா அம்சத்தின் கீழே   “இனி அடுத்த வருடத்திலிருந்து வெப் கேமரா நுட்பத்தை நுகர முடியாது” என்ற செய்தியை காணலாம்.ஆம் யூ-டியூபின் வழியே சொந்த வீடியோக்களை உருவாக்கி பதிவேற்றும் உரிமை 2016லிருந்து நீக்கப்படும்.இதனால் சொந்தமான வீடியோக்களை நாம் நேரடியாக பதிவேற்ற முடியாது. ஏனெனில் இந்த நுட்பம்  பயனர்கள் பலரால்  பயன்படுத்தபடுத்தப்படாததால் இதனை   நீக்கும் முடிவிற்கு வந்துள்ளனர்.அப்படியென்றால் முழுவதுமாக இந்த நுட்பத்தை பயன்படுத்த முடியாது என்பதில்லை இதற்கு பதிலாக மொபைல் சாதனத்தில் மென்பொருள் சாதனத்தின்  வழியாக வீடியோக்களை ஏற்றிக் கொள்ளலாம்.

 

அனைவருக்கும் தெரிந்த Mac OS X-க்கான போட்டோ பூத் ,  மற்றும் விண்டோவ்ஸ் 8+ க்கான கேமரா போன்றவற்றை  பயன்படுத்தி யூ-டியூபில்  பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.நீங்கள் ஒரு iOS அல்லது ஆண்ட்ராய்டு போன் பயனராக இருந்தால், உங்களது மொபைல் சாதனத்தின் உதவியோடு எடுத்த  கேமரா வீடியோக்களை  யூ -டியூப் பயன்பாட்டின்  வழியாக பதிவேற்ற முடியும்.ஆகையால் ஜனவரி 16லிருந்து யூ -டியூபின் வெப் காமிரா அம்சத்தை பார்க்க முடியாது . அதற்கு பதிலாக மென்பொருள்களின்  வழியாக   இந்த அம்சத்தை நுகரலாம்.

Leave a Reply