முதலில் பழைய கணினியாக இருந்தால் இயங்குதளம் நிறுவ வந்தட்டில் போதுமான இடம்,Ram இன் அளவு போன்ற windows 7 ற்கான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக கணினி இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.
Windows மட்டுமல்ல,எந்த இயங்குதளம்-OS- என்றாலும் கணினியில் பதிக்க-install- இரண்டு முறைகள் உண்டு.
ஒன்று clean install – ஏற்கனவே கணினியில் எந்த இயங்குதளமும் இல்லாத போதும்-புதிய கணினிகளில்-,அல்லது முற்றாக வந்தட்டை சுத்தம் செய்து-format- பதிவது.இதன்படி போர்மட் செய்யும் போது ஏற்கனவே உள்ள அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டு புதிதாக இயங்குதளம் நிறுவப்படும்.
Clean install செய்யும் முன்னர்- வேண்டிய தேவையான கோப்புகளை சேமித்துக் -backup- கொள்ளவும்.
இயங்குதளத்தை நிறுவ USB/CD/DVD இதில் ஏதாவது ஒன்றில் இயங்குதளம்- Windows 7 installation disc -boot செய்யக்கூடிய வகையில் -ISO போன்ற- இருக்க வேண்டும்.( CD /DVD இல்லையேல் இணையத்தில் இருந்து DVD /USB ISO ஆக பதிவிறக்கிக் கொள்ளலாம்) இல்லையேல் Windows 7 installation disc ஐ வந்தட்டின் வேறொரு பகுதியில் -Partition- இயங்குதளம் சேமித்து அங்கிருந்து boot செய்து வந்தட்டில் நிறுவமுடியும்.
Boot செய்ய கணினி தொடக்கும் போது எந்த இடத்தில் இருந்து boot செய்ய வேண்டுமோ அதை USB/CD/DVD/Partirion- முதல் boot ஆக BIOS இல் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.தெரிவு செய்ய கணினி தொடங்கும் போது DEL/F9/F10 ஏதாவது ஒன்றை -கணினிக்கு கணினி இது மாறுபடும்- அழுத்துவதன் மூலம் தெரிவு செய்து boot செய்யலாம்.(ஆனாலும் சில புதிய கணினிகளில் தானாகவே கணினி தேடிக் கொள்ளும்.)
கணினியின் வேறொரு பிரிவில்-partition D /E ....-, இணையத்தில் இருந்து தரவிறக்கி, இயங்குதளம் சேமிக்கப்பட்டு இருந்தால், அந்த இடத்தில் setup.exe என்பதை double click செய்து தொடக்கலாம்.
ஏற்கனவே கணினியில் வேறொரு இயங்குதளம் இருந்தால்,புதிதாக நிறுவ இருக்கும் இயங்குதளம் எந்த பிரிவில் -partition- நிறுவ வேண்டும் என்பதை தெரிவு செய்து கொள்ளவும்.
Windows 7 installation disc -USB/CD/DVD/Partirion இல் பதிவு செய்யப்பட்ட இயங்குதளம்-உரிய இடத்தில் கொடுத்து கணினியை மீள்தொடக்க- தானாகவே நிறுவ ஆரம்பிக்கும் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கலாம். உதாரணமாக பெயர்,இணைய இணைப்பு,மொழி,பாவிக்கும் இடம்,Accept the License Terms .........போன்றவை.
இதுதவிர சிரமப்பட எதுவும் இல்லை.OS நிறுவ எந்த முன் அறிவும் தேவையில்லை.
முடிந்தவரை 10-15 நிமிடங்களில்-fast install- செய்யாமல் இருப்பது நல்லது.