நீங்கள் ஏன் PHP படிக்க வேண்டும்?

1,740

 8,078 total views

இன்று நாம் பெரிதும் பயன்படுத்தும் FaceBook/Wordpress போன்ற தளங்கள் PHP எனும் கணினி மொழியால் எழுதப்பட்டவைகள்.

உங்களுக்கு PHP தெரிந்திருந்தால், உங்களால் ஒரு Youtube போன்ற தளத்தை சொந்தமாக நிறுவ இயலும்.. உங்களால் அடுத்த புதிய முகநூலைக் கூட வடிவமைக்க முடியும்.

யாரால் PHP படிக்க இயலும்?

உங்களுக்கு C மற்றும் HTML தெரிந்திருந்தால் PHP  படிப்பது மிகவும் எளிது.

நான் ஒரு கல்லூரி மாணாக்கன்., எனக்கு இது தேவையா?

ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருடம் தோறும் தேர்ச்சி பெற்று Fresher  ஆக வேலை தேடிக்கிளம்புகிறார்கள். ஒரு வேலை நீங்கள் PHP கற்று, ஒரு சிறிய OpenSource Package நிரலாக்கம் செய்திருந்தால், நீங்கள் ஒரு அனுபவமிக்கவர் (Expereinced Candidate) என அறியப்படுவீர்கள்.

எனது கல்லூரிப் பருவத்தில் தான்  நானும் PHP படித்தேன். அது என்னை TCS campus interview இல் தேர்ச்சி பெற உதவியது.. இது என் சுய அனுபவம்.

சுய வேலைவாய்ப்பு?

PHP படிப்பதால் உங்களால் சுயமாக ஒரு தணியாள் (Freelancer) அல்லது நிறுவனமாக முன்னேற முடியும். அதற்கு நானே ஒரு உதாரணம். தமிழ் வழிக் கல்வியில் பள்ளிப்படிப்பை முடித்து வந்த நான் இன்று MCA முடித்து சுமார் 35 (Feb-2012 stats) முழு நேரப் பணியாளர்கள் இருக்கும் நிறுவன (Web Development Company) முதன்மை செயலாளர் மற்றும் பங்குதரராக இருக்கிறேன்.

வேலை வாய்ப்பு ?

ஆர்வமுடன் கற்க்கும் அனைவருக்கும் கண்டிப்பாக வேலை வாய்ப்பு உள்ளது.

எங்கு படிக்கலாம்?

TechTamil.com உங்களுக்கு PHP பற்றிய நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும். நான் சில படங்களையும் பதிவு செய்துள்ளேன்.

ஒரு வணிகக் கணினி பயிற்றுவிக்கும் நிறுவனத்தில் (Computer center) படிப்பதை விட ஒரு “Web Development” கம்பெனியில் படிப்பது மட்டுமே உங்களின் தகுதியை வளர்க்க உதவும்.

நானே எனது நிறுவனத்தில் (BLAZE Web Services Private Limited – Madurai)  பகுதி நேரமாக ஒரு In-Plant Training நடத்தி வருகிறேன்.

சில நேரங்களில் எனது நேரடி வகுப்புகளும் உண்டு.

கட்டணம்:  Rs. 7000   &  Rs. 12000 (Advanced)

கால அளவு:  50 Hours

தொடர்பு: 0452 6543332 (அலுவலகம்) – 902511 1144 (திரு. கிருஷ்ணகுமார்)

என்னடா இவன் ஒரு பெரிய விளம்பரம் போட்டு இருக்கிறானே என நினைக்க வேண்டாம்.

நான் தினமும் இந்த விளக்கத்தை குறைந்தது 2 நபர்களுக்காவது நேராகவோ / தொலைபேசியிலோ / மின்னஞ்சலிலோ சொல்லிக் கொண்டு இருக்கிறேன்…

“முடியல…”

ஆதலால் PHP கற்க விரும்பும் எவரும் இதனைப் பார்த்து புரிந்து கொள்ளவும்.

நன்றி.,
TECHதமிழ் கார்த்திக்.

You might also like

Comments are closed.