இலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)
3,660 total views
நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத் தலைவராக இருக்கலாம் அல்லது ஒரு பொறியாளராக இருக்கலாம். உங்களுக்கு உள்ள ஒரு மாபெரும் சவால் உங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணிகளை எப்படி ஒழுங்குப்படுத்தி அவற்றை செய்வது மற்றும் அந்தந்த பணிகள் பற்றிய புதிய தகவல்களை எப்படி முறைபபடுத்தி பின்னாளில் பார்ப்பது என்பதாகும்.
ஒரு சிறந்த மேலாளராக நீங்கள் உருவாக செய்ய வேண்டிய வேலைகளில் ஒன்று இதுவாகும்.
நான் எனது நிறுவனத்தில் பயன்படுத்தும் இலவச இரண்டு மென்பொருள்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
௧(1). Asana.com
இணையம் சார்ந்த மென்பொருள் (பதிவிறக்கி , நிறுவுவ வேண்டிய அவசியம் இல்லை)
நீங்கள் மிக எளிதாக உங்களின் Google Account வைத்து உள் நுழையாலாம்.
அதிக பட்சம் 30 சக பணியாளர்களை உங்களின் WorkSpaceஇல் இணைக்கலாம்.
புதிய பணிகளை (Tasks) மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் உருவாக்கலாம்.
பல பணிமுனைகளை (Workspaces) நீங்கள் உருவாக்கலாம்.
இது எப்போதும் இலவசமாகவே இருக்கும்… உங்களை கட்டாயமாக பணம் செலுத்த சொல்லமாட்டார்கள்.
Management & Administration பணிகளை ஒருங்கினைக்க ஏற்றது.
௨ (2). Trello.com
இணையம் சார்ந்த மென்பொருள் (பதிவிறக்கி , நிறுவுவ வேண்டிய அவசியம் இல்லை)
மென்பொருள் பொறியாளர்கள் பயன்படுத்த மிகச் சிறந்தது.
நீங்கள் மிக எளிதாக உங்களின் Google Account வைத்து உள் நுழையாலாம்.
எத்தனை சக பணியாளர்களையும் நீங்கள் இணைக்கலாம்.
Task Label போன்ற வசதிகள் உள்ளது.
இதில் உள்ள Activity Bar உங்கள் சக ஊழியர்கள் செய்யும் பணிகளை உடனே தெரியப்படுத்தும்.
Boards & Cards முறையில் இது இயங்கும்.
இதுவும் எப்போதும் இலவசமாகவே இருக்கும்…
Comments are closed.