519 total views
கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரையிலான விடுமுறை தினங்களில் வாடிக்கையாளர்களால் ஆப்பிளின் ஸ்டோர்களில் வாங்கப்பட்ட ஆப்களின் புள்ளி விவரங்கள் பற்றிய தகவல்களை ஆப்பிள் வெளியிட்டுள்ளது. கிருஸ்துமஸ் முதல் ஜனவரி 3 வரையிலான விடுமுறை தினங்களில் மட்டுமே ஆப்பிள் கடைகளில் வாங்கப்பட்ட ஆப்களால் 1.1பில்லியன் டாலர்கள் வரையிலான பணத்தை ஆப்பிள் ஈட்டியுள்ளது. வாராந்திர கணக்குகளை நோக்கும்போது ஜனவரி 1, அதாவது புத்தாண்டன்று மட்டுமே 144மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இதனால் இதற்கு முந்தைய ஒரு நாள் சாதனையை இது முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடத்தின் அறிக்கையின்படி ஆப்பிள் ஸ்டோரின் சாதனை புத்தகத்தில், வாடிக்கையாளர்கள் அனைவரும் ஐபோன் , ஐபேட், மேக், ஆப்பில் வாட்ச் மற்றும் ஆப்பிள் டீ.வீ போன்றவற்றிக்கான பலவகையான ஆப்களை வாங்குவதில் 20பில்லியன் டாலர் வரை செலவளித்துள்ளனர். 2008 முதல் உலகளவில் ஆப்பிள் ஸ்டோர் ஆப்களை உருவாக்கும் டெவலப்பர்களுக்காக மட்டுமே 40 பில்லியனை செலவளித்திருந்தது. இதில் மூன்றில் ஒரு பங்கினை கடந்த வருடத்தில் அடைந்துள்ளது. மேலும் 2015 இல் 20 பில்லியனை ஆப்களை உருவாக்குவதில் செலவிட்டுள்ளனர். ஆப்பிள் வருடா வருடம் அதன் ஐபோன் விற்பனையில் 22.1சதவிகித வளர்ச்சியை பெற்று வருகிறது.மற்றும் ஆப்பிள் 2015-ஆம் ஆண்டு தொடர்ந்து வெளியிட்ட ஐபோன் , ஐபேட் ப்ரோ போன்றவற்றின் வரவாலே இத்தகைய புது புது ஆப்கள் தேவைகள் அதிகமாகி வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டுள்ளன. மேலும் விடுமுறை தினங்களில் மக்கள் அவர்களின் நேரத்தை கழிக்க அதிக கேம்கள் மற்றும் ஆப்களை வாங்கி பயனடைவதை மகிழ்ச்சியாக கருதுவதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
Comments are closed.