மைக்ரோசாஃப்டிற்கு சொந்தமான Cortana-வை இனி அன்றாய்டில் பெறலாம்….!

493

 971 total views

 Cortana  என்று அழைக்கப்படுகின்ற அதாவது செயற்கை நுண்ணறிவு கொண்டு மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இந்த நுட்பத்தினை மைக்ரோசாப்ட்டுடன் சேர்ந்து சையனோஜன் அன்றாய்டு போனில் அறிமுகப்படுத்த உள்ளது. One Plus One ஸ்மார்ட் போன் என்பது 2016ல் வரவிருக்கும் ஒரு ஸ்மார்ட் போனாகும். கார்ட்டானாவை இதுவரை ஆப்பிளில் உபயோகப்படுத்தியே பார்த்திருப்போம். ஆனால் தற்போது சையனோஜனுடன் சேர்ந்து அன்ட்ராய்டு பதிப்புகளில் தர உள்ளது.அன்ட்ராய்டு பதிப்பென்றால் அனைத்து மொபைல் சாதனங்களிலும் கிடைக்குமென்பதில்லை. One Plus One ஸ்மார்ட் போன்களில் மட்டுமே  அறிமுகப்படுத்த உள்ளது. இதனை கட்டண சேவையுடன் முதற்கட்டமாக  அன்ட்ராய்டு பதிப்பான One Plus One ஸ்மார்ட் போனினை அமெரிக்க பயனர்கள் மட்டும் பெறும்படி செய்யப்பட்டுள்ளது. இது ஆப்பிளில் செயல்படும்  Siri  மற்றும் Cortana போன்ற சக்தி வாய்ந்த செயல்திறனைக் கொண்டு செயல்படும் என உறுதியளித்துள்ளனர். மேலும் சோதனை ஓட்டமாகவே One Plus One ஸ்மார்ட் போனில் அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த முயற்சி வெற்றி பெற்ற பின் அனைத்து நாட்டிலும்  அன்றாய்டு போன்களிலும் பெற வாய்ப்புள்ளது.
     ஒருவேளை இந்தியாவில் அனைத்து அன்றாய்டு  போன்களிலும்    Cortana அறிமுகபடுத்தபட்டால் அதன் பின்  கைக்கு வேலை கொடுக்காமல்  பல்வேறுபட்ட வேலைகளை   Cortanaவே செய்துவிடும். உலகளவிலான அனைத்து அன்றாய்டு பயனர்களுக்கும்  இது வரமாக அமையலாம். நேரத்தை மிச்சபடுத்தி கைக்கு  வேலை கொடுக்காமல் அனைவரும் எளிதாக பயன்படுத்தும்படி அமையும் .  மேலும்  மனிதனுக்கு செயற்கை நுண்ணறிவின் வழியாக  ஒரு உதவியாளனாக இருந்து அனைத்து வகை சிறந்த அறிவுரை , பரிந்துரை , பதில்கள் போன்றவற்றை  வழங்கும். உதாரணமாக
“என்னை 6 மணிக்கு எழுப்பு “
“தந்தைக்கு போன்  செய்யவும்  “
“பாடங்களை குறிப்பெடுத்துக் கொள்ளவும் “
“இனிய பாடலை  இசைக்கவும் “
“தற்போது நான் எங்கே இருக்கிறேன்”
“இங்கே இருந்து டெல்லி எவ்வளவு தூரம் “
“எனக்கருகிலிருக்கும்  மலிவான உணவகத்தை கூறு “
              போன்ற கேள்விகளுக்கு பதில்களை வழங்க கூடியது. இதுவரை அப்பிளில் மட்டுமே  கண்டு  வந்த மைக்ரோசாப்ட்டின்  Cortanaவை இனி அன்றாய்டு பதிப்புகளில் பெற தயாராகுங்கள். மேலும் முதல்  முறையாக one  plus  one-இல்  இதனை அறிமுகபடுத்த உள்ளதால் இந்த வருடம் அறிமுகபடுத்தவிருக்கும் one  plus  one-போனின் விற்பனை  உச்சத்தை தொட வாய்ப்புள்ளது.

You might also like

Comments are closed.