மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :

671

 998 total views

மைக்ரோமேக்ஸ்  நிறுவனம்  இரண்டு புதிய செல்பி ஸ்மார்ட் போன்களான  போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 ஆகிய   ஸ்மார்ட் போன்களை   அறிமுகபடுத்தியுள்ளனர்.      இதில் போல்ட் செல்பி அமேசானில்  ரூ.4999  க்கு விற்பனை செய்யப்படுகிறது.  மேலும் கேன்வாஸ் செல்பி4 -ன் விலையினை இந்த மாத கடைசியில்  வெளியிடும் என மைக்ரோமேக்ஸ் குழுவினர்  தெரிவித்துள்ளனர்.

download

               மைக்ரோமேக்ஸ் போல்ட் செல்பி காமிராவில் 5மெகா பிக்சல்கள்   மற்றும் “Beauty mode” உடன்  வருகிறது .  4G இணைப்பு கொண்ட ஸ்மார்ட்போனில்  4.5-இன்ச் திரை மற்றும்  1750 mAH பேட்டரி  கீழ் இயக்கப்படுகிறது. மேலும் 1 GHz குவாட் கோர் செயலியுடன்  1GBரேம் மற்றும் 32GB விரிவாக்கக் கூடிய  நினைவகத்தைக் கொண்டது. இது  லாலிபாப் பதிப்பின்  கீழ் செயல்படுகிறது. வெள்ளை நிறங்களில் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.  செல்பி காமிராவில் அதிக பிக்சல்கள் கொண்டிருப்பதனாலே இதன் பெயர் போல்ட் செல்பி என அழைக்கப்படுவதை உணரலாம்.
              ஆன்ராய்டு  மார்ஷல்லோவின்  கீழ் இயங்கும்   மைக்ரோமேக்ஸ்  கேன்வாஸ்  செல்பி  ஸ்மார்ட் போன்  மே  மாத இறுதியில் கிடைக்கும் என  கூறியுள்ளனர்.  5- அங்குல  திரை மற்றும் மற்றும்  8MP முன் காமிரா மற்றும் 8MP பின் காமிரா  ஆகியவற்றினைக் கொண்டது.  இவை 1750 mAH பேட்டரியின் கீழ் இயக்கப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் போல்ட்  வன்பொருள் அளவுருக்கள்:
 
 • 4.5 அங்குல  திரை 
 • 1 GHz  குவாட் கோர் செயலி
 • 5MP பின்புற கேமரா
 • 5MP  முன்  கேமரா
 • 1 ஜிபி ரேம்
 • 8GB சேமிப்பு
 • அண்ட்ராய்டு 5.1 லாலிபாப்
 • 1,750mAh பேட்டரி
 • இரட்டை சிம் ஆதரவு கொண்டது – 4G
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 வன்பொருள்  அளவுருக்கள்: 
 • 5 அங்குல காட்சி
 • 1.3 GHz  குவாட் கோர்  செயலி
 • 8MP பின்புற கேமரா
 • 8MP முன் கேமரா
 • 1 ஜிபி ரேம்
 • 8GB சேமிப்பு
 • அண்ட்ராய்டு 6.0  மார்ஷல்லோ
 • 2,500mAh பேட்டரி
 • இரட்டை சிம் ஆதரவு கொண்டது – 3G

You might also like

Comments are closed.