கணினி தயாரிக்கலாம் வாங்க ….!

0 86

எவ்வளவு கணினிகள்  புதிது  புதிதாக வந்தாலும் அவையனைத்தையும்  உருவாக்குவது மற்றும் அதன் கட்டமைப்புகளை அறிந்து கொள்வதற்கான நம்மில் ஆர்வம்  பலருக்கு எப்போதும்  இருக்கும்.அப்படி ஆசை கொண்டவர்களுக்ககாவே  பை-டாப் என்றழைக்கப்படும் மடிக்கணினியினை கிக்ஸ்டாட்டர்  நிருவனத்தினர் அறிமுகபடுத்தியுள்ளனர்.இதன் மூலம் வன்பொருள் பற்றி புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள்  அனைவரும் பயன்படுத்தலாம். இந்த கணினி பச்சை வண்ண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக்  கணினியில் மற்ற மடிக் கணினிகளைப்  போன்று  பயனர்கள் ஒரு கணினியை வாங்கியதும் அதை பாதுகாத்து உபயோகிப்பது என்றில்லாமல்  பயனர்கள்  அதனை சொந்தமாக உருவாக்கி கொள்ளும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால்  ஒரு கணினியின் மென்பொருள் மற்றும் வன்பொருள் பற்றிய தகவல்களை அறிந்து சொந்தமாக கணினியினை தயாரித்து பயன்படுத்தலாம்.

இதில்   கணினியின் அனைத்து வன்பொருள் பாகங்களையும்   பயனர்களே பொருத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் அவரவர்  சொந்த முயற்சியிலேயே  மடிக்கணினியை உருவாக்கலாம். கணினி பாகங்களைப் பொருத்துவது என்பது கடினமாக இருந்தாலும்  இதனை கையாளுவது மிகச் சுலபமே!  பை-டாப்பின் மூலம் இதுவரை பயனர்களுக்கு தெரிந்திராத வன்பொருள்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் கணினியில் வன்பொருள் துறையில் தங்கள் எதிர்காலத்தை செலுத்த விரும்புபவர்களுக்கு கண்டிப்பாக கை கொடுக்கும். கணினி பாகங்கள் பற்றி தெரிந்து கொள்ளக் கூடிய ஆர்வம் இருப்பவர்களுக்கு  இந்த மடிக் கணினி உண்மையில் சுவாரஸ்யமானதே! பை-டாப் மடிக்கணினிகளின்   முன் முன்பதிவை தற்போது பெறலாம்.

You might also like

Leave A Reply