ஆளில்லா விமானத்தின் மூலம் இரத்ததானம் மற்றும் மருந்துகள் பரிமாற்றம்:

665

 1,710 total views

                 சாதாரணமாக ஆன்லைனில் நாம் ஆர்டர் செய்யும் பொருட்கள் 15 நாட்களுக்குள் நம்மை  வந்தடையும்  ஆனால் ஆளில்லா விமானங்களின் வழியே   ஒரு பொருளை ஆர்டர் செய்தால்  அவை ஆர்டர் செய்த சிலமணி நேரத்திற்குள்   வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும். இந்த  வரிசையில் உயிரை காப்பாற்றும் இரத்ததானம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் , தடுப்பு ஊசிகள் போன்ற  பரிமாற்றத்தினை துவக்கியுள்ளனர். இந்த நுட்பம்  Rwanda  நாட்டில் அறிமுகப்படுத்தியதனை அடுத்து அமெரிக்காவின்  மூன்று பெருநகரங்களான  Maryland, Nevada, and Washington, போன்ற இடங்களில்  துவக்கியுள்ளது. 

 

                          மேலும் இதனால்  ஆபத்து காலங்களில்  இரத்தமில்லாமல்  வருடத்திற்கு நேரிடும்  பல இலட்சக்கணக்கிலான    உயிரிழப்புகள் குறைக்கப்படும்.  Zipline என்றழைக்கப்படும்  “Zips”  வாகனங்களின் மூலம்   இது  சாத்தியமாகிறது.  இதனால் இரத்தம் தேவைப்படும் வேளையில்   உயிருக்கு போராடுபவர் எந்த ஒரு இடத்தில் இருந்தாலும்  இரத்த வங்கிகளில் பணிபுரிபவர்கள் ஒரு குறுந்தகவலை அனுப்பிய அடுத்த நிமிடமே  “Zips” என்ற ஆளில்லா விமானம் மூலம் தேவைப்படும் வகை இரத்தத்தினை ஒரு சில  மணி நேரங்களில் கொண்டு சேர்க்கிறது .  டிரோன் டெலிவரியை உயிர்காக்கும் பொருட்கள் பரிவர்த்தனையில் பயன்படுத்துவது உண்மையில் பாராட்டுக்குரியதே!!  இது போன்ற நுட்பம் கூடிய விரைவில்   இந்தியாவிலும்  வந்தடையும் என எதிர்பார்க்கலாம்.
                                      

You might also like

Comments are closed.