1,293 total views
இணைய வாணிகத்தில் பிரபலமானதும் அனைவரும் அறிந்ததுமான அமேசான் நிறுவனம் சரக்கு போக்குவரத்துக்கென தனியே வான்வழி சேவையை தொடங்கியுள்ளது. ஆம் முதல் முறையாக வான்வழி போக்குவரத்திற்கென தனியொரு விமானத்தையே அமேசான் உருவாக்கியுள்ளது. அந்நிறுவனம் இதற்கு பிரைம் ஏர் என பெயரிட்டுள்ளனர்.


விமானம் தயாரிக்க காரணம் :
கடந்த ஆண்டில் அமேஸான் நிறுவனம் கையாண்ட பொருட்களின் மதிப்பு 100 கோடிக்கு மேல் இருந்த நிலையில் திருவிழாக் காலத்தில் பல பொருட்கள் உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கப்படாததால் அமேசான் ரீஃபண்ட் (Refund ) உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு உள்ளானது . இது போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தனி விமான சேவையை தொடங்கியுள்ளது. இதனால் ஆர்டர் செய்யும் பொருட்கள் தாமதமின்றி குறித்த நேரத்தில் சேர்க்கவும் முடியும். இது அமேசானின் இணைய வாணிகத்தின் ஒரு மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
Comments are closed.