டெஸ்லா காரின் சோதனை ஓட்டம் :

535

 792 total views

கடந்த பல மாதாங்களாகவே டெஸ்லாவை தானியங்கு காராக மாற்றும் பல முறைகளை கையாண்டு வந்தது. பின்னர் இந்த வாரம் இந்த அம்சத்தை டெஸ்லா முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. தானியங்கு காரில் இரு வகை உள்ளது. ஒன்று முழுவதுமாக யாருடைய உதவியும் இல்லாமல் இயங்கும் கார்கள் மற்றொன்று பாதி மனிதரின் உதவியின் மூலம் இயங்கும் காராகும் . ஒரு முழு தானியங்கு காரை 2020இல் வெளிக்கொண்டு வர பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருக்கும் வேலையில் பாதி தானியங்கு காரை டெஸ்லா அறிமுகப்படுத்துகிறது .இதன் மூலம் உங்கள் நீண்ட நெடுஞ்சாலை பயணத்தை குறைந்த வலியுடன் கடக்கலாம்.முழுவதுமான தனியங்கி கார்கள் சந்தையில் வர இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகும் என்பதால் இது ஒரு முதல் படியாக அமையக்கூடும் என டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி திரு.இலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எப்படி வேலை செய்யும்?
நீங்கள் நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிர்க்கும் போது “ஆட்டோ ஸ்டீரிங்” சிறப்பம்சமானது உங்கள் காரினை பாதுகாப்பான வேகத்தில் பராமரித்தும் மேலும் மற்ற வாகனங்களுக்கு இடையேயான போதுமான இடைவெளி விட்டும் ஓட்டிச் செல்லும். மேலும் பெரிய வளைவுகள் மற்றும் திருப்பங்களிலும் உங்களை சரியான போதுமான இடைவெளியில் இட்டுச் செல்லும்.உதாரணமாக நீங்கள் குறிப்பிட்ட இடைவெளியை விட்டு விலகி வாகனத்தை ஓட்டும்போது அது எந்த வித சப்தத்தையும் எழுப்புவதில்லை மாறாக அது தானாகவே சக்கரங்களை கட்டுபடுத்தி கட்டுபாட்டுக்கு கொண்டு வருகிறது.நீங்கள் போகவேண்டிய திசை அல்லது வழி வந்தவுடன் அது ஒரு பாப் ஒலியை அறிவுறுத்துகிறது.இந்த பாதி தானியங்கு கார் தற்போது நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே தயார்படுத்தி வருகிறது. இதற்கு போக்குவரத்து விதிகளை பற்றி தெரியாது என்பதை டெஸ்லா உணர்த்துகிறது.

டெஸ்லா ஆட்டோ ஸ்டீரிங் மற்றும் ஆட்டோ பைலட் :
360 டிகிரி அல்ட்ரா சோனிக் சென்சார் என்பது காரின் முன்னால் மற்ற வாகனங்களையும் பார்வர்ட் பேசிங் ரேடார் மூலம் மழை மற்றும் மூடுபனி போன்றவற்றையும் பார்வர்ட் பேசிங் கேமராவின் மூலம் வேகக்குறிகளையும் உயர்த்தர துல்லிய GPS அமைப்பின் மூலம் முக்கியமான வரைபட தகவல்களையும் சோதிக்க பயன்படுகிறது.மேலும் பார்க்கிங் வசதி மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது . உண்மையில் ஒரு மனித ரோபோதான் காரை பார்க் செய்வது போன்ற உணரவைத் தரக்கூடியது. reverse
ஆட்டோ பைலட் அம்சம் TC யின் தர முத்திரை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
விபத்துகளை தவிர்க்கவும் மற்றும் தானாகவே பார்க்கிங் செய்யும் திறமையையும் கொண்டது. குறுகிய காலமாகவே மற்ற கார் உற்பத்தி செய்யும் நிருவனங்களான மெர்சிடிஸ் பென்ஸ், அக்கூரா மற்றும் ஆடி உட்பட மற்ற கார் தயாரிப்பு நிருவனங்களும் ஆட்டோ பார்க்கிங் மற்றும் நெடுஞ்சாலையில் வாகனங்களை ஒட்டுதலுக்குரிய அம்சங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.இந்த மாதிரியான பாதி தானியங்கு கார்களால் எதிர்காலத்தில் வரும் கூகுல் மற்றும் ஆப்பிளின் முழு தானியங்கு கார்களை ஏதிர்கொள்ளுவதில் மக்களுக்கு சிரமம் இருக்காது என்பது உறுதி.

You might also like

Comments are closed.