​இன்று புதிய விண்டோஸ் 10 வெளியிடப்படுகிறது!

132
இன்னும் விண்டோஸ் எக்ஸ் பி, விண்டோஸ் 7 பயன்படுத்தும் நம்மில் பலரும் விண்டோஸ் 8 இயக்கு தளத்தை பயன்படுத்தவில்லை. பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் ஸ்டீவ் பால்மர் அறிமுகம் செய்தது விண்டோஸ் 8.  கைபேசி, டேப்லெட், மடி கணினி, கணினி என அனைத்திலும் இயங்கும் ஒருங்கிணைந்த இயக்கு தளமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் சில குறைபாடுகள் மற்றும் புதிய/முதியவர்களுக்கு பயன்படுத்த , கற்றுக்கொள்ள சற்று கடினமாக இருந்ததால் யாரும் விண்டோஸ் 7 , xp யில் இருந்து விண்டோஸ் 8 க்கு மாறவில்லை.

நோக்கியா நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதால் அதிருப்பதி அடைந்த மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டாளர்கள் பால்மரை பதவி விலக வைத்து, சத்யா நாதெல்லாவை முதன்மை செயல் அலுவலராக நியமித்தனர்.

இன்று இவர் தலைமையில் புதிய விண்டோஸ் 10 (9 பதிப்பு என ஒன்று இல்லை) அறிமுகம் செய்யப்படுகிறது.

அனைவரும் இலவசமாக புதிய விண்டோஸ் 10 பதிப்பை தங்கள் கணினியில் உள்ள விண்டோஸ் பதிப்பில் இருந்து மேம்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் உங்கள் கணினியில் போலி விண்டோஸ் பதிப்பு வைத்திருந்தாலும் ஒரிஜினல் விண்டோஸ் 10 பதிப்பிற்கு அப்கிரேடு செய்து கொள்ளலாம். இரண்டாம் வருடத்தில் இருந்து நீங்கள் விண்டோஸ் 10 க்கு பணம் செலுத்த வேண்டும். அந்த தொகையும் மிகவும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் செய்திகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடம் டெக்தமிழில் பிரசுரமாகும்.

 

You might also like

Comments are closed.