இளைஞர்களை DRY ஆக்கிய TRAI .SMS கு வச்சுட்டாங்க ஆப்பு :(
653 total views
வருகிற 26.02.2011 முதல் ஒரு நாளைக்கு 100 SMS கு மேல் இலவசமாக அனுப்ப முடியாது. TRAI முதலிலேயே இது பற்றி அறிவித்து இருந்தது .ஆனால் நடைமுறை படுத்தவில்லை. ஆனால் இப்பொழுது இந்த செய்தி உறுதி படுத்தப்பட்டுள்ளது. எதற்காக இப்படி ஒரு முடிவு எடுக்கப் பட்டது என்று பார்த்தால் , டெலி மார்க்கெட்டிங் (Tele Marketing) என்று சொல்லக் கூடிய தொலைபேசி வழியாக குறுந்தகவல் அனுப்பி பொருட்கள் மற்றும் வியாபாரம் பற்றி விளம்பரப் படுத்துவோரை தடுக்கவே இப்படியொரு நடவடிக்கை.
ஆனால் இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு முடிவு. நாள் ஒன்றுக்கு 1000 SMS வரை அனுப்பும் கில்லாடிகள் நாட்டில் எத்தனையோ பேர் . அதை விடுங்கள் தொலைபேசியில் அழைக்காமல் வெறும் SMS மூலம் பல விசயங்களை சாதிப்போரின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். ஆனால் TRAI கு கொஞ்சம் கருணை அதிகம் வெறும் 50 SMS மட்டுமே தரலாம் என்று கூட யோசித்து இருந்தார்கள் . நல்ல வேலை இரு மடங்காக கொடுத்துவிட்டார்கள். நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒரு நாளைக்கு 100 SMS மட்டுமே அனுப்ப முடியும்.
ஒன்று மட்டும் உறுதி , எந்த தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் முன்னேருகிறதோ, அது நம்மை பின்னோக்கி தாக்கும். நாட்டுல எத்தனையோ சரி பண்ண வேண்டி இருக்கு . அது எல்லாம் கண்டுக்க மாட்டேங்கிறாங்க. 🙁 ராசா வே உன்ன எண்ணி ♫♪♫♫♪♫♪♫☼♪♫☼♪♫
Comments are closed.