E-Mail சேவை அழிவை நோக்கி செல்கிறதா!!
1,018 total views
கடித போக்குவரத்திற்கு அஞ்சலை நம்பிய காலம் மலையேறி நாம் அனுப்பும் தகவலை அடுத்த நொடியே உலகின் எந்த மூலையில் இருந்தாலும் படிக்கும் வசதி அளித்த மின்னஞ்சலுக்கு அனைவரும் மாறினர். இப்பொழுது சமூக தளங்களின் வளர்ச்சியாலும் மொபைல் போன்களின் வளர்ச்சியாலும் ஈமெயில் அனுப்புவது கணிசமாக குறைந்துள்ளதை அனைவரும் அறிவோம். உதாரணமாக ஏதேனும் பண்டிகை என்றால் contact list-ல் உள்ள அனைவருக்கும் மெயில் அனுப்புவதற்கு பதில் தற்பொழுது வாழ்த்தை சமூக தளத்தில் பகிர்ந்து விட்டால் போதும் அடுத்த நொடி அனைவரும் அந்த செய்தியை பார்த்து கொள்ளலாம். எதிர்காலத்தில் Email சேவையே இருக்காது என சில தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அப்படியே இருந்தாலும் அதன் உபயோகம் மிக மிக குறைவாக இருக்கும் எனவும் கூறி உள்ளானர்.
- உலகில் 290 கோடி EMail கணக்குகள் உள்ளனவாம்.
- ஒருநாளைக்கு சராசரியாக 18,800கோடி செய்திகள் அனுப்பப்படுகிறது. பேஸ்புக்கில் 6கோடி தகவல்களும், Twitter-ல் 14கோடி tweet update செய்யப்படுகிறது.
- கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 107 ட்ரில்லியன் ஈமெயில்கள் அனுப்பப்பட்டுள்ளது.ஒரு வினாடிக்கு 3,392,948 ஈமெயில்கள் அனுப்பட்டுள்ளது. இது 2009 ஆண்டை காட்டிலும் 19% அதிகமாகும். இதில் 45% ஸ்பாம் ஈமெயில்களாகும்.
- ஸ்பாம் ஈமெயில்களை உருவாக்குவதில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் கொரியாவும் உள்ளதாம்.
இப்பொழுது ஈமெயில் சேவையை அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் தான் அதிகளவில் உபயோகிக்கின்றன்றனர். இதற்கு ஏதேனும் மாற்று வழி வந்து விட்டால் ஈமெயில் சேவை மேலும் கேள்விக் குறியாகி விடும். ஈமெயில் இருக்குமா இருக்காதா என காலம் தான் பதில் சொல்ல வேண்டும் காத்திருந்து பார்ப்போம்.
Comments are closed.