இந்தியாவின் கொள்கைகள் தொழில் புரிய வசதியாக இல்லை – Dell & Vodafone

813

 2,069 total views

மின்சார பற்றாக்குறை, தேவையில்லாத வரிகள் மற்றும் உடன்படிக்கைகள் என இந்தியா ஒரு மிகவும் கடினமான சந்தையாக உள்ளது என DELL நிறுவனத்தின் ஆசியா பசிபிக் மற்றும் ஜப்பான் பிராந்திய தலைமை அலுவலர் அமித் மிதா அவர்கள் இந்தக் கருத்தை Reuters  செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

“Doing business in India is difficult because the problem is there are too many decision makers,”

“And decision makers change quite often. New decision makers come and they don’t honor the contract previously signed.”

“That sort of a set-up doesn’t work for any global company for that matter.”

இங்கே முடிவுகள் எடுக்கும் அதிகாரம் பலரிடம் உள்ளதாகவும்.  ஒரு ஆட்சியில் ஒரு
அலுவலர் போட்ட ஒப்பந்தம் அடுத்த ஆட்சியில் மதிக்கப்படுவதில்லை எனவும்
இவர் தெரிவித்துள்ளார்.

Dell என்பது பரம்பரை பணக்கார நிறுவனம் அல்ல. ஒரு சாதாரண தனிமனிதனின்  பெரும் உழைப்பில் உருவானதுதான்  Dell.  இவர்களின் முக்கியமான வியாபார உத்தி., அரசு ஒப்பந்தப் புள்ளிகளை (Tenders) பெற்று, குறைந்த விலை மற்றும் தரமான கணினி பொருட்களை கொடுப்பது தான்.  தொழில் போட்டியை விட அரசியவாதிகள் மற்றும் அதிகாரிகளின் பேராசை இவர்களை போன்று பல நிறுவனங்களை கசக்குகின்றன.

ஒரு வேலை இந்த நிறுவனம் நமது சட்ட திட்டங்களை ஏமாற்ற முடியாமல் இவ்வாறு சொல்கிறதா என்றும் நாம் ஆராய வேண்டும்.

Dell மட்டுமல்ல ஜெர்மனியின் Fraport எனும் உலகின் 2வது  பெரிய விமான நிறுவனமும் இந்திய அரசின் கொள்கைகளை விமர்சித்துள்ளது.  கடந்த வாரம் Vodafone நிறுவனமும் இதே கருத்தை தெரிவித்துள்ளது.

இதை நாம் சில்லரை வனிகத்தில்  அந்நிய நிறுவனங்களின் நேரடி முதலீடு கொள்கையுடன் ஒப்பிடக் கூடாது. ஆனால் அரசு இந்த சூழ்நிலையை ஒரு உதாரணமாகக் காட்டி நமது அன்னிய  நிறுவனங்களுக்கான கொள்கைகளை தளர்த்த வேண்டும் என நம்மை ஏமாற்றி சில்லரை வனிகத்தில் அவர்கள் நுழைய இந்த அரசு ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கும்.

உண்மையில் இங்கே பிரச்னை அதிகாரத்தில் இருக்கும் மனிதர்கள் தான்.  மேடைக்கு மேடை இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசுவது மட்டுமே அரசின் நோக்கமாக உள்ளது.  பொருளாதாரக் கொள்ளை என்பது.. அயல் நாட்டு வணிகணை மட்டுமல்ல நமது தெரு பெட்டிக் கடைகார அண்ணன் வரை அனைவருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

நாடகம் தொடரும்.

You might also like

Comments are closed.