அமெரிக்க அமேசானும் இப்போது கைபேசி தயாரிக்கிறது
893 total views
கைபேசி வியாபாரத்தில் கடும் போட்டியிடும் SONY, SAMSUNG, APPLE, NOKIA, LGபோன்ற நிறுவனங்களுக்கு இடையில் AMAZONன் 3D தொழில்நுட்பம் கொண்ட புதிய கைபேசியை இன்று சந்தையில் அறிமுகம் செய்து விற்பனை செய்ய AT&T முன்வந்துள்ளது.
“விடுமுறை காலத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து இந்தக் கைபேசி சந்தையில் கிடைக்கும் ” என்கிறது THEWALLSTREET JOURNALலின் அறிக்கை. ஆனால் இதன் விலை என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை, அமேசான் மற்றும் AT&Tநிறுவனங்களின் பிரதிநிதிகளிடமும் இதுபற்றி தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த கைபேசி 3Dகண்ணாடி இல்லாமலேயே ஒரு 3Dதிரையை போன்று செயல்படுகிறது. WALL STREET JOURNALஅறிக்கை படி இந்த கைபேசியில் உள்ள நான்கு முன் பக்க கேமராக்கள் நமது கண்திரையை கண்காணித்து இந்த 3D EFFECTஐ சாத்தியப்படுத்துகிறது. இம்மாத துவகத்தில் AMAZON ஜூன் 18 ஒரு விசேஷ நிகழ்வு இருப்பதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது,அதற்கான விடை தான் இந்த மூக்கு கண்ணாடி இல்லாத 3Dஸ்மார்ட் கைபேசி….
Comments are closed.