“Google” எடுத்திருக்கும் தடி “Motorola”

477

 740 total views

A Brief report on googles new motorola acquisition. கூகிள் நிறுவனம் மோட்டோரோலா நிறுவனத்தை கையகப்படுத்தியது ஏதோ எதேட்சையாகவோ அல்லது நீண்ட காலம் திட்டமிட்டோ நடந்தது அல்ல. இது எதிர்காலத்தில் எந்த ஒரு எதிரியும் முளைத்துவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. இதைப்பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன் ஒரு சிறிய தகவலை கேளுங்கள்.

கணிணி தொழில்நுட்பம் ஆரம்பித்தது முதலே ஒவ்வொரு தொழில்நுட்பத்தில் யாராவது ஒருவர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். ஆனால் இதில் யார் எல்லாம் வெற்றி காண தொடங்கினார்களோ அவர்கள் எல்லாம் தான் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தில் உயர்ந்ததை விட அடுத்தவர் கண்டுபிடித்ததை தமதாக்கிக் கொண்டதன் மூலமே உயர்ந்து உள்ளனர். இதற்கு பெரிய உதாரணம் “Microsoft”. ஒருவர் தான் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை யாரும் திருடிவிடாமல் இருக்க மற்றும் அதை தன்னுடைய அனுமதி இல்லாமல் உபயோகிக்காமல் இருக்க “Patent” (காப்புரிமை) வாங்கி வைத்திருப்பார்கள். இப்பொழுதுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் போட்டியே இந்த “Patent” காப்புரிமைகளை பணம் கொடுத்து தமதாக்கிகொள்வது தான். இப்பொழுது அந்த Patent வாங்கியுள்ள நிறுவனத்திடம் மற்ற நிறுவனங்கள் கையேந்தி நிற்க வேண்டும் “என்ன ஒரு வில்லத்தனம்”.

சரி “Patent” என்றால் காப்புரிமை, இங்கு இணையதள ஜாம்பவான் கூகிளுக்கு இப்பொழுது எதற்கு Motorola என்ற தடி தேவைப் படுகிறது என்று வியக்கும் மக்கள் பல பேர். இதில் சுவாரசியம் என்னவென்றால் Motorola இப்பொழுது பெரிதாக வருவாய் ஈட்டாமல் போய்க்கொண்டிருக்கும் நிறுவனம். சுருக்கமாக சொன்னால் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிறுவனம். நொண்டிக் குதிரையின் மேல் கூகிளின் நோட்டம் ஏன் என்று பார்ப்பதற்கு முன். கூகிளின் பரிணாமத்தை பார்ப்போம்.

சுவரில் விளம்பரம் ஒட்டிகொண்டிருந்த காலத்தில் இணையத்தில் விளம்பரம் செய்து கொண்டிருந்தவன் தான் இந்த கூகுள். இணையதள தேடுதலுக்கு வழிகாட்டியாக இந்த நிறுவனத்தை ஆரமபித்தனர் இரு நண்பர்கள் பின்பு

இணையதளங்களுக்கு மார்க் (Mark) போட ஆரம்பித்த இவர்கள்.
உங்கள் மார்க் கூடுவதற்கு நாங்கள் உதவி செய்கிறோம், மக்களிடம் உங்களை பிரபலப் படுத்துகிறோம் என்று

விளம்பர வியாபாரத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள். பின்பு

மின்னஞ்சல் வசதி செய்துகொடுத்தார்கள்

இப்படி எந்த தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தினாலும் அதை இலவசமாக கொடுத்தார்கள்.

வசதி அதிகம் தேவைப்படுபவர்கள் பணம் கொடுத்து மேன்பட்ட (premium service) சேவைகளை பெற்றார்கள்.

ஆகா இவன் பாரிவள்ளல் பரம்பரையோ என்று என்ன வேண்டாம்.

Google ஒரு அக்மார்க் எட்டப்பன். உங்கள் தனிப்பட்ட விவரங்களை சேகரித்தான் வியாபார நோக்கத்திற்காக.

தமிழ்நாட்டு மக்கள் எப்படி இலவசங்களை கண்டு ஏமாருகிறார்களோ அதேபோல் உலகையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறது Mr.கேடி (Google).

இப்பொழுது கூகுள் இலவசமாக தந்திருப்பது கைபேசிகளில்(Mobile) பயன்படும் மென்பொருளான Android (ஏன்டிராய்டு).
பயபுள்ள ரொம்ப நல்லவனோ என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். இப்பொழுது மொத்தமாக நீங்கள் கூகுளின் சேவகனாகிவிட்டீர்கள் புரியவில்லையா நீங்கள் பயன்படுத்த மற்றும் விளையாட மென்பொருள்களும் இலவசமாக மற்றும் காசு கொடுத்து வாங்க “Android Market” என்ற கடையையும் விரித்து வைத்திருக்கிறான். இலவசமா ஜாலி எண்டறு மட்டும் நினைக்காதீர்கள் இதன் பின் கூகுளின் வியாபார யுத்தியும் உள்ளது. நீங்கள் இலவசமாக பயன்படுத்தும் மென்பொருள் அனைத்துமே கூகுளின் விளம்பரத்தை சிறிய அளவில் உங்களுக்கு காண்பித்துக் கொண்டே இருக்கும் . எப்படி பார்த்தாலும் கூகுளின் பிசினெஸ் (தொழில்) வெற்றி தான்.

வரும் காலத்தில் (washing machine,fridge, AC) என அனைத்துமே இந்த ஏன்டிராய்டு மென்பொருளை உபயோகிக்கப் போகிறது. (இதுக்கே கண்ண கட்டுதே ).

இவ்வளவு பெரிய ஜாம்பவானின் சீட்டுக்கு(இருக்கை) கீழே ஆணி வைக்காமல் இருப்பார்களா. வச்சுட்டாங்களே அட அது தாங்க இந்த “Patent”. Nortel Networksனு ஒரு கனடிய(canada) நிறுவனம். தொலைதொடர்பு துறையில் கொடிகட்டிய இந்நிறுவனம் 2009ல் திவால் ஆனது. இதனிடம் சுமார் 6000 காப்புரிமைகள் இருந்தன இதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டியிட்டன நம்ம கேடி கூகிளும் தான் . ஆனால் பங்காளி தகராறில் Microsoft + Apple இருவரும் மற்ற சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து $4.5billion (4500000000000$) பணம் கொடுத்து கூகுளை பின் தள்ளியது. இந்த போட்டியில் பெரிய சுவாரசியம் என்ன வென்றால் ஏலத்தில் எதிர்பார்த்தது $1 billion வந்ததோ ஐந்து மடங்கு அதிகம். இப்பொழுது தெரிகிறதா அடியில் ஆணி வைத்தார்களா அல்லது கடப்பாறையா என்று.

அடி பட்ட பாம்பு சும்மா இருக்குமா. அதன் விளைவு தான் Motorola என்ற தடியை தமதாக்கிக் கொண்ட சூட்சமம். Motorola விடம் 17,000 காப்புரிமைகள் இருக்கின்றன மேலும் 7500 காப்புரிமைகள் அங்கிகாரம் பெற காத்துள்ளன. அடடா முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன் இதற்காக கூகிள் செலவிட்டுள்ள தொகை வெறும் $12.5billion ($12500000000000) மட்டும் தான் அதாவது 12500000000000 x 45.6 இந்திய ரூபாயில் இதை பெருக்கினால் வரும் தொகை.

இந்த கையகப்படுத்தல் மூலம் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் தன்னை காத்துக்கொள்ள முடியும் என்று கூகுள் நம்புகிறது. அனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இப்பொழுது Apple நிறுவனத்தின் சரி சம பங்காளியாக கூகுள் உருவெடுத்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த Android மன்பொருள் பயன்படுத்தி கைப்பெசிகளை(Mobile phone) தயாரிக்கும் நிறுவனங்களான Samsung, HTC போன்ற நிறுவனங்கள் என்ன செய்ய போகின்றன என்று எல்லோரும் யோசிக்கிறார்கள்.

எது எப்படியோ தொழில்நுட்ப யுத்தம் தொடங்கிவிட்டது . ஊரு ரெண்டு பட்டா கூத்தடிக்கு கொண்டாட்டம்னு சொல் உண்டு . ஆனா இங்கு கூத்தாடிகள் ரெண்டுபட்டு உள்ளார்கள் ஊர் என்னாகப் போகிறதோ.


You might also like

Comments are closed.