8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம்
1,395 total views
புனேயில் உள்ள அபிநவ் வித்யாலயா ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இந்தச் சாதனையாளர் பெயர் விக்னேஷ் சுந்தர்ராஜன்.
இவர் http://www.zettaconnect.co.in/index.php/en/ என்ற புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இது Facebook போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை இணைப்பதே நோக்கம் என்று விக்னேஷ் கூறியுள்ளார்.
நான்கு மாதங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு இந்த புதிய சமூக வலைதளத்தை அவர் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த Zettaconnect லாபம் ஈட்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். 14 வயது நிரம்பிய விக்னேஷின் முயற்சியும் பெரிய வெற்றியை தேடித் தரட்டும் என்று வாழ்த்துவோம்.
Comments are closed.