சேற்றில் இருந்து மின்சாரம்

0 33

மின்சாரத் தட்டுப்பாட்டில் நாம் உள்ளோம்.  மரபு சார் மின்சாரத்தை விடுத்து மின்சாரத்தை வேறு எவ்வாறு உருவாக்குவது என பல நாடுகளும் முயன்று வருகின்றன. அந்த முயற்சியில் இஸ்ரேல் நாடும் முயன்றது. அவர்கள் முயற்சி சற்று வித்தியாசமானது. சேற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் GRPL தரப்பில் கூறப்படுவதாவது: ஆற்றுப் படுகையில் சேரும் சேறு, சகதியில் படிந்திருக்கும் மின்காந்த சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கான இயந்திரங்களை பயன்படுத்த சுற்றுச்சூழலுக்கு ஆதரவான சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படும். இயற்கை எரிவாயு தயாரிப்பு உலை மூலம் சேறு, சகதியை வெப்பமூட்டுவதன் மூலம் அது வாயுவாக வெளிப்பட்டு டர்பைன்கள் வழியாக மின் உற்பத்தியாகும். சேறு, சகதி மட்டுமின்றி தண்ணீரில் நனைந்த குப்பைகளில் காணப்படும் சக்தியிலும் மின் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Posts

You might also like

Leave A Reply