கூக்கிள் ம்யூஸிக் : கூகுளின் புதிய சேவை

849

 1,720 total views

கூகுள் நிறுவனம் ஒரு புதிய சேவையைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே பல சேவைகளை வழங்கி வரும் கூகுள் ஆப்பிளின் ஐடியூன்ஸ் மேட்ச் சர்வீஸ் என்ற சேவையை ஒத்த ஒரு புதிய சேவையைத் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் ஆப்பிளோடு சரியான விதத்தில் போட்டி போட முடியும் என்று கூகுள் நம்புகிறது. மேலும் இந்த புதிய சேவை கூகுள் மியூசிக்கின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிகிறது.

ஆப்பிள் தனது ஐடியூன்ஸ் மேட்ச் சர்வீசுக்கு 24.99 அமெரிக்க டாலர்களை வசூல் செய்கிறது. ஆனால் கூகுள் தனது புதிய இசை சேவையை இலவசமாக வழங்க இருக்கிறது. மேலும் இந்த சேவை வரும் நவம்பர் 13 முதல் தொடங்க இருக்கிறது.

ஏற்கனவே கூகுள் தனது ப்ளே சர்வீசை பல நாடுகளுக்கு விரிவுபடுத்த இருப்பதாக அறிவித்திருந்தது. அதற்கா டுவன்டியத் சென்சுரி பாக்ஸ், டைம், பீப்பிள், இன்ஸ்டைல் மற்றும் ஒரு சில நிறுவனங்களோடு கூட்டணியும் அமைத்து இருக்கிறது. இதன் மூலம் ஏராளமான டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், மற்றும் பத்திரிக்கைகளை வழங்க முடியும் என்று கூகுள் நம்புகிறது.

இவற்றோடு கூகுள் வார்னர் மியூசிக் குரூப் என்ற நிறுவனத்தோடும் கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த நிறுவனம் தனது புதிய பாடல்களை ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்து கொண்டிருக்கும். எனவே இந்த புதிய கூட்டணியின் மூலம் கூகுள் தினமும் புதிது புதிதான பாடல்களை வழங்கலாம் என்று எண்ணுகிறது.

மேலும் இந்த புதிய சேவையை ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வரும் நவம்பர் 13 முதல் தொடங்க இருக்கிறது.

தற்போது     இந்தியாவில்  இந்த சேவை இன்னும் நிறுவப்படவில்லை .

You might also like

Comments are closed.