விண்டோஸ் 8 புதிய பதிப்பின் விலை ரூ. 1999 மட்டுமே…
1,865 total views
மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் தமது மிக முக்கியமான தயாரிப்பான விண்டோஸ் இயக்கு தளத்தின் முழு கட்டமைப்பையும் 25 வருடங்களுக்குப் பின்னர் மாற்றி கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
பில் கேட்ஸ் அவர்களுக்குப் பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஸ்டீவ் பால்மர் இந்த புதிய படைப்பை வெளியிட்டுள்ளார்.
இனி புதிதாக விற்கும் அனைத்து மடிக்கணினி அனைத்திலும் புதிய Windows 8 மட்டுமே நிறுவப்பட்டிருக்கும்.
உங்களிடம் ஒரிஜிநல் Windows 7 இருந்தால் மிகவும் குறைந்த விளையான 2000 செலுத்தி (Credit Card, Paypal) மூலம் இணையம் வழியாக இந்த புதிய 8 இயக்கு தளத்தை பதிவிரக்கி நிருவலாம். அல்லது கடைகளில் விரைவில் இது விலைக்கு வர உள்ளது.
பொதுவாக.. மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் ஒரு தீய நிறுவனம் என்றும் அது விற்கும் பொருள்கள் அதன் விலைக்கு ஏற்ற வேலைகள் செய்வதில்லை என பல Apple புகழ் பாடிகள் சொல்வதுண்டு… இந்த அவப் பெயரை நீக்கும் வண்ணம் Apple Macindosh இயக்கு தளத்திற்கு போட்டியளிக்கும் வகையில் இந்தப் புதிய Windows 8 பல சிறந்த செயல் முறைகளைக் கொண்டுள்ளது.
1. வரையும் வகையில் உள்ள பாஸ்வர்ட்.
2. ஒரே சொடுக்கு மட்டும் போதும் , மென்பொருள்களை எளிதில் நிறுவ, நீக்க…
3. முழுவதும் இலகு தொடு திரை பயன்பாடு
இந்த புதிய இயக்கு தளம் பயன்படுத்த சற்று கடினமாக ஆரம்பத்தில் இருக்கும்.. ஆனால் நாளடைவில் இதில் உள்ள பல புதிய நன்மைகள் நமக்கு உபயோகமாகவே இருக்கும்.
இதில் உள்ள சில குறைகள் விரைவில் சரி செய்து புதிய Service Pack விரைவில் வரலாம்.
இணையத்தில்.. சிலர் தங்களுக்கு Windows 8 தொடு திரை பொருள்களில் (Mobiles & Tablets) பயன்படுத்த அற்புதமாக உள்ளது என சொல்கின்றனர். ஆனால் ஒரு கணினியில் இதை பயன்படுத்துவது சற்று சிரமமாகவே உள்ளதாக சொல்கின்றனர்.
Comments are closed.