அமேசானில் முன் பதிவு செய்பவர்களுக்கு 10 சதவிகித தள்ளுபடி…!
628 total views
உலக அளவில் முன்னனணி வர்த்தக நிறுவனமான அமேசான் அதன் கிளவுட் சேவைகளில் ஒரு புதிய சேவையை வழங்கியுள்ளது. அதன் படி வழங்கி வந்த அமேசானில் முன்பதிவு செய்பவர்களுக்கு என தள்ளுபடியை வழங்கவுள்ளது. இதனால் மாதம் மற்றும் வாரக் கணக்கில் பேக் அப் செய்பவர்கள் முன்பதிவு செய்வதன் மூலம் குறித்த நேரத்தில் கிளவுட் சேவையின் மூலம் தங்கள் தரவுகள் தானாகவே பேக் அப் செய்து கொள்ளப்படும் . இந்த முறை மிகவும் மலிவான முறையாகும். ஆகையால் கிளவுட் சேவையை பேக் அப் செய்து கொள்பவர்கள் முன்பதிவு செய்யும் முறையின் மூலமாக தாங்கள் குறிப்பிட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரங்களில் பேக் அப் செய்து கொள்ளலாம். மேலும் முன் பதிவு செய்பவர்கள் ஒரு வருடத்திற்கென மொத்தமான முன்பதிவுகளைப் பெற்றால் பயனர்கள் 5 முதல் 10சதவிகிதம் வரை தள்ளுபடியைப் பெறலாம். மேலும் அனைவரும் உபயோகிக்கும் போக்குவரத்து நிறைந்த சமயமான பகல் வேளைகளில் முன்பதிவினை ஓதுக்குபவர்களுக்கு 5 சதவிகிதம் வரையிலும் இரவு நேரங்களில் பேக் அப் செய்பவர்களுக்கு 10 சதவிகிதம் வரையிலான தள்ளுபடிகளும் ஒதுக்கப்படும். இதன் மூலம் அமேசான் அதன் போக்குவரத்து நிறைந்த சமயங்களை சமாளிக்க முடியும். மேலும் இதுபோன்ற ஒரு வருட முன்பதிவுகளை கால அட்டவணையின் படி ஒதுக்கியவர்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி சலுகை வழங்கப்பட உள்ளது. இந்த தள்ளுபடியானது தற்போது அமெரிக்க கிழக்கு (வடக்கு வர்ஜீனியா), அமெரிக்க மேற்கு (ஒரிகன்) மற்றும் ஐரோப்பிய (அயர்லாந்து) போன்ற பகுதிகளில் மட்டுமே அறிமுகபடுத்தியுள்ளனர்.அமேசானின் இந்த முடிவு போக்குவரத்து நிறைந்த முடிவுகளை சமாளிப்பது மட்டுமல்லாமல் அமேசான் பணியாளர்களுக்கும் வேலை சம்மந்தப்பட்ட இலக்குகளை அடைய ஏற்றதாக இருக்கும்.
Comments are closed.