இந்தியாவின் இணையப் பயன்பாடு

594

 1,084 total views

இந்தியாவில் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் மும்பையில் இருக்கிறார்கள். இந்தியவில் 243 மில்லியன் நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் மும்பையில் மட்டும் 16.4 மில்லியன் நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.அக்டோபர் இறுதி வரையிலான நிலவரம் இது. இந்ததகவல் IAMAI என்று  சுருக்கமாக சொல்லப்படும்  Internet  and  Mobile  Association  of  India என்றஅமைப்பு  எடுத்தஆய்வில் தெரியவந்துள்ளது.

artImg198x166_18330

  இந்த  ஆய்வின் படி   இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை 16. ம் மில்லியன் பயனாளர்களை  கொண்டுள்ளது. இதற்க்கு  அடுத்தபடியாக தலைநகரான  டெல்லி இரண்டாவது  இடத்தில்  உள்ளது. இது 12.1  மில்லியன் பயனாளர்களை  கொண்டுள்ளது. ஒவ்வோரு ஆண்டும் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50  சதவிகிதம் உயர்ந்து  வருவதாக தகவல்கள்  சொல்லுகின்றன.

 கொல்கத்தா 6.27 மில்லியன் பயனார்களோடு  மூன்றவது  இடத்திலும், பெங்களுர் 5.99 மில்லியன் பயனார்களுடன் 4வது இடத்திலும், 5.98 மில்லியன் பயனாளர்களுடன் சென்னை 5 வது  இடத்திலும் உள்ளது.

   நாட்டின் ஒட்டு மொத்த இணைய பயன்பாட்டாளர்களில் 58 சதவிகிதம் நபர்கள் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு,ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புணே ஆகிய 8 முக்கிய நகரங்களில்  இருக்கிறார்கள்.

internet-users11

இதேபோல சூரத், ஜெய்ப்பூர், லக்னோ வதோர போன்ற  நகரங்கள் அதிக  அளவு  பயனாளர்களை  கொண்டுள்ளது.  சூரத் 2.97 மில்லியன் பயனாளர்களையும், ஜெய்ப்பூர் 2.35 மில்லியன் பயனாளர்களையும், லக்னோ 1.95 மில்லியன் பயனாளர்களையும் மற்றும் வதேரா 1.85 மில்ல்யன் பயானாளர்களியும் கொண்டுள்ளது  இவையே ஒரு  மில்லியனை  தாண்டி  பயனாளர்களை கொண்ட  நகரங்கள் ஆகும்.

mobile-use_650_021213084103

   நாட்டில் அனைவருக்கும் இணையம் என்ற இலக்கை நோக்கி திட்டமிட்டு அரசு  செயல்படுவது குறிப்பிடதக்கது.

You might also like

Comments are closed.