வேலை வாய்ப்பு @ InfoSys
1,448 total views
இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் 2100 பணியாளர்களை அமெரிக்காவில் பணியமர்த்த முடிவெடுத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நிறுவனத்தின் விரிவாக்கம் நடைபெற இருக்கிறது. இந்த நிறுவனம் Digital, Big Data, Analytics மற்றும் Cloud ஆகிய துறைகளில் உள்ளடக்கியே இந்த மாற்றம் இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இன்ஃபோஸிஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான உறவை தொடரவும், அவர்களுக்கு மிக சிறந்த தொழில் நுட்ப சேவையையும், வணிக சேவையும் செய்ய இந்த முடிவு எடுத்து இருப்பதாக அவர்கள் சொல்லுகின்றனர். இதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களின் உள்ளூர் சந்தைக்கு ஏற்றபடி சேவைகளை வழங்க முடியும் என்பது அவர்கள் கருத்து. ஏற்கணவே 1600 பணியாளர்களை இந்த நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளனர். மேலும் 600 இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இன்ஃபோஸிசின் 60 சதவித வருமானம் ஆனது வட அமெரிக்காவினை சேர்ந்தது என்பது குறிப்பிடதக்கது.
டி.சி.எஸ் வேலைவாய்ப்பு
இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் (டி.சி.எஸ்.) இந்த ஆண்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனதினர் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்த தகவல்கள், நடப்பு நிதி ஆண்டில் டி.சி.எஸ். நிறுவனத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே 36,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில்,நிர்ணயித்த இலக்குக்கும் மேல் கணிசமாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூற முடியும்.
கல்வி நிறுவனங்களில் நேர்காணல் மூலம் இந்த ஆண்டு 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கல்வி நிறுவனங்களில் நடத்தும் நேர்காணலில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். 350 முதல் 400 கல்வி நிறுவனங்களில்நேர்காணல் நடத்தப்படும். ஒரு ஆண்டுக்குத் தேவையான ஊழியர்கள் எண்ணிக்கை குறித்து முந்தைய ஆண்டே திட்டமிட வேண்டியுள்ளது. 2015-2016 நிதி ஆண்டுக்கானவேலை வாய்ப்புக்கான நேர்காணல், கல்வி நிறுவனங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.
முன்னதாக, இந்நிறுவனம் இரண்டாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 5,244 கோடியைப் பெற்றுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இக்கால அளவில்பெற்ற நிகர லாபத்தைவிட இது 13 சதவீதம் கூடுதலாகும். 2013-2014 நிதி ஆண்டில் ஜூலை-செப்டம்பரில் பெற்ற நிகர லாபம் ரூ. 4,653.9 கோடியாகஇருந்தது. இந்த ஆண்டில், இரண்டாம் காலாண்டில் மொத்த வருவாய் 13.5 சதவீதம் அதிகரித்து ரூ. 23,816 கோடியைப் பெற்றுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் தொழிலில் ஈடுபட்டு வரும் துணை நிறுவனமான சிஎம்சி நிறுவனத்தை டிசிஎஸ்-உடன் இணைப்பதாகவும் அறிவித்து இருந்தனர். டி.சி.எஸ்.ஸில் தற்போது 3.13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்; இதில் பெண் ஊழியர் எண்ணிக்கை 1 லட்சத்தைக்கடந்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இது ஒரு சாதனை என்பது குறிப்பிடதக்கது.
இந்த ஆண்டு ஐ.ஐ.டி யில் பணி நியமனம் மிக அதிகமாக நடந்து இருப்பதால், உலக அளவில் அரசியல் பொருளாதார காரணிகள் நிறுவனக்களுக்கு சாதமாக இருப்பதை காட்டுகிறது இந்த ஆண்டு வேலை வாய்ப்பு எல்லா நிறுவனங்களிலும் மிக சிறப்பாக இருக்கும். எனவேலை வாய்ப்பு துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துருந்தனர்.
Comments are closed.