வீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா ?

41

உண்மையற்ற இன்ஜின் 4 தொழில் நுட்பம்  என்பது  இனி  வரும்  ஆண்டுகளில் சந்தைக்கு வரவிருக்கும் வீடியோ கேம்களே ! இவை  விரைவில் போரில் ஆயுத கருவியாக  செயல்படுத்த உள்ளனர். அல்லது ஏறக்குறைய ராணுவ  பயிற்சியில்  ஒரு பாகமாகவாவது  உபயோகிக்க உள்ளனர் .இந்த உண்மையற்ற இஞ்சின் கருவியை, எபிக் நிறுவனமும் சோர் டெக்கும் சேர்ந்து  அரசாங்கம்  மற்றும் இராணுவத்திற்காக உருவாக்கியுள்ளது.

எபிக் கேம்கள் என்பது உண்மையற்ற  ஒரு விளையாட்டை உருவாக்கும் நிறுவனமாகும். தற்போது  இது சோலார் டெக்  நிருவனத்துடன் இணைந்து அரசாங்கம்  மற்றும் இரானுவத்தினருக்கு  தேவையான இன்ஜின்களை வடிவமைத்து  தரும் வேலையை செய்கின்றனர். இதில் செயற்கை நுன்னறிவினை  பயன்படுத்தி  உருவகபடுத்தல்கள்  மற்றும் இராணுவ வீரர்களுக்கு  பயிற்சி தருவதனை  நோக்கமாக  கொண்டு தயாரித்துள்ளனர். வீடியோ கேம்களை விளையாட்டோடு மட்டுமே நிறுத்தி விடாமல் அதனை உயிர் காக்கும் ஒரு  துறையில் பயன்படுத்துவது அதன் சிறப்பை குறிக்கிறது . அதோடு மட்டுமல்லாமல்  விளையாட்டோடு கூடிய ஒரு பயிற்சியை எடுத்துக் கொண்ட அனுபவத்தை  ஒரு சுமையாக எண்ணாமல்  சுவாரஸ்யத்தோடு  கற்றுக் கொண்ட ஒரு திருப்தியை பெறலாம்.  இதனை அமெரிக்க அரசாங்கம் 1990-களிலிருந்தே பயன்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

இதனால் அவர்கள் செயற்கையான ஒரு நுண்ணறிவு நுட்பம் கொண்ட  ஒரு பயிற்சியினை  விளையாட்டாகவும் அதே சமயம் ஆர்வத்துடனும் கற்றுக்  கொள்ளலாம் .இந்த  நுட்பத்தையே பயன்படுத்தி   ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கும்  இளம் வயதினருக்கும்   ஒரு பேரிடரின் போதோ அல்லது திடீரெனெ  ஏற்படும்  தீ விபத்தின்  போதோ  ஏற்படும் சிக்கல்களை  சமாளிக்க கற்றுக் கொடுக்கலாம்.

You might also like