விரைவில் Apple iPad 3

958

 1,757 total views

Apple நிறுவனத்தின் iPad 3 வரும் மார்ச் மாதம் அறிமுகமாகிறது. இதனால் சந்தையில் இப்போதே களைகட்டுகிறது.

San francisco – வில் உள்ள எர்பா பியூனா கலை மையத்தில் ஆப்பிள் iPad 3 அறிமுகம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு பெரிய நிகழ்வையும் ஆப்பிள் இந்த மையத்தில்தான் வழக்கமாக நடத்தும்.

ஆனால் எந்த தேதியில் இந்த அறிமுகம் நடக்க இருக்கிறது என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வெளியான அடுத்த வாரமே iPad 3 விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

இந்த iPad 3 அடுத்த தலைமுறைக்கான iPad-ஆக இருக்கும் என்ற எண்ணற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய iPad ஆப்பிள் iPad 2வைப் போல் இருந்தாலும் இதன் வேகம் 2வை விட அதிகமாக இருக்கும். அதற்கான மேம்படுத்தப்பட்ட processing unit மற்றும் 2048×1536 ரெட்டினா display போன்ற அம்சங்கள் இந்த iPad 3ல் உள்ளன.

2011 iPad 2ன் ஆண்டு என்றால் 2012 iPad 3-ன் ஆண்டாக இருக்குமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. ஆனால், ஆப்பிள் iPad- 3 குறித்து ஆப்பிள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதையும் வெளியிடப்படவில்லை.

ஆனால் இந்த கேள்விகள் மற்றும் வதந்திகளுக்கெல்லாம் ஆப்பிள் பதில் சொல்லாது என்று ஆப்பிளின் அதிகாரி தெரிவித்திருக்கிறார். எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் ஆப்பிள் iPad 3 வந்துவிடும் என நம்புவோமாக.

You might also like

Comments are closed.