Google +ல் Translate வசதியை கொண்டு வர [Chrome]

878

 1,719 total views

பிரபல சமூக இணையதளமான கூகுளால் களமிறக்கப்பட்ட Google +  இணையதளம் நாளுக்கு நாள் அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இந்த வருட முடிவிற்குள் Google + சுமார் 500 மில்லியன் வாசகர்களை பெறும் என இணைய வல்லுனர்கள் கணித்துள்ளனர். மேலும் வாசகர்களை கவர நாளுக்கு நாள் பல்வேறு வசதிகளை Google +  தளத்தில் புகுத்தி கொண்டு உள்ளனர். அந்த வரிசையில் கூகுளின் மிக சிறந்த சேவையான Google Translate வசதியை எப்படி Google + தளத்தில் கொண்டு வருவது என இங்கு பார்ப்போம்.

Google +ல் Translator வசதியை கொண்டு வர:

 

  • குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் தற்பொழுது இந்த வசதியை கொண்டு வர முடியும். முதலில் https://chrome.google.com/webstore/detail/jfppgkomfopklagggkjiaddgndkgopgl இந்த link-ல் click செய்து நீட்சியை குரோம் உலவியில் install செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு Google + தளத்தை open செய்து பாருங்கள். ஒவ்வொரு பதிவிற்கும் முடிவில் Translate என்ற link வந்திருக்கும். அதனை click செய்தால் அந்த பதிவு ஆங்கிலத்தில் மாறிவிடும். Default Language ஆங்கிலமாக தேர்வு செய்து இருப்பதால் பதிவுகள் ஆங்கிலத்தில் மாறும்.)
  • Default Language மாற்ற:
    நீட்சியின் மேல் mouse கர்சரை வைத்து right click செய்து Options என்பதை click செய்யவும்.
    அடுத்து வரும் window-வில் உள்ள Language என்ற பகுதியில் உள்ள மொழியை உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளவும்.
    மற்றும் மொழி மாற்றத்தின் பின்புற நிறத்தையும் இதில் தேர்வு செய்து கொள்ளலாம்.

 

 

You might also like

Comments are closed.