நான் ஏன் ரூ. 16000க்கு அதிகமா போன் வாங்குவதில்லை?
2,612 total views
ஒரு குட்டிக் கதையோட ஆரம்பிக்குறேன்: ஒரு toothpaste தயாரிக்கும் நிறுவனம் இருந்துசாம். அவுங்களுக்கு ஒரு மாசத்துக்கு ஒரு ஊர்ல ஒரு லட்சம் பற்பசை டப்பாக்கள் தான் விற்பனை ஆகுமாம். முதலாளி விற்பனைய ஒன்றை லட்சமா அந்த ஊர்ல அதிகமாக்க யோசனை கேட்டாராம்… உடனடியா எப்படி 50000 டப்பா அதிகமா விக்குறது? சாத்தியமே இல்லனு மேலாளர் சொன்னாராம். அப்போ துணை மேலாளர் திருவாளர் ஆல் இன் ஆல் அழகுராஜா, கையில பேஸ்ட் பிரஸ வைச்சுக்கிட்டு சொன்னாராம்…
“எல்லாரும் நல்லா பாருங்க., நான் காலைல பேஸ்ட் ட்யூப இவ்ளோ நீளத்துக்கு அழுதுவேன், அப்றோம் பல்லு விளக்க ஆரம்பிச்சுதுவேன். என்னோட மனக்கணக்கு பேஸ்ட் எவ்ளோ நீளத்துக்கு பிரஸ்ல இருக்குனு பார்ப்பது தான்… அதனால., இந்த ட்யூப் வாய் பகுதி விட்டத்த பெருசாக்குணோம்னா, எல்லாரும் அதே நீளத்துக்கு தான் அமுக்குவாங்க! ஆனா நிறைய பசை வெளியே வந்துடும்.. இப்போ மாசத்துக்கு ஒண்ணு வாங்கும் மக்கள் ரெண்டு மாசத்துக்கு மூணு வாங்குவாங்க! ”
நுகர்வுக் கலாச்சாரம்னு ஒண்ணு இருக்கு., வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் தொடர்ந்து லாபம் சம்பாதிக்க அடிக்கடி புதிய தயாரிப்புகல இல்லனா தமக்குத் தாமே போட்டி பொருள்கள் தயாரிப்புல ஈடுபடுவாங்க. சிறந்த உதாரணம்: பெண்கள் மற்றும் என்னைப் போன்ற சில ஆண்களும் துணி துவைக்கப் பயன்படுத்தும் ஸர்ஃப் Excel, Tide, Rin போன்ற பல பொருட்களும் உலகத்தில் இரண்டே இரண்டு நிறுவனங்கள் தான் தயாரிகின்றன ( Uni Lever / P & G ) .. அருகிய சிலவற்றைத் தான் இந்திய மற்றும் பிற நிறுவனங்கள் தயாரிகின்றன.
அவருக்கு நிறைய முடி இருக்கு, எனக்கு நிறைய கடை இருக்குன்ற மாதிர., அவர்களுக்கு தொடர்ந்து லாபம் கிடைக்கும் என்பதற்க்காக நாம் போதுமானதாக பயன்படுத்துவதை புதுப்பித்து, வேற மாடல் வாங்குனா தான் நல்லதுனு ஒரு மனநிலைக்கு நம்மை தள்ளுகிறார்கள்.
முன்னாடிலாம் பஸ்ல வரும்போது நோகியா ரிங்தொன் அடிச்ச உடனே பலரும் அவுங்க போன எடுத்து பார்த்துப்பாங்க. எங்க அம்மா சொல்லுவாங்க, “ஏன் தங்களோட ரிங்தொன் என்னானு தெரியாதா? போன் இருக்குனு பெருமையா எடுத்துக்காட்டுறதப் பாரு” னு.
பொண்னுக நகை, சேலை மேல விருப்பமா இருக்குறத நாம கிண்டல் பண்ணுவது மாதிரி, பல பெண்களும் ஆண்கள் தங்களின் போன்களை காட்டி பந்தா பண்னுவதை கிண்டல் செய்கிறார்கள். ஆனா பல ஆண்கள் போன் பெருமை காட்டுவது பெரும்பாலும் தங்களின் நண்பர்களிடமும் உடன் பணிபுரியும் ஆட்களிடமும் தான்.
iPhone வைச்சு “Hi Dude”னு சொல்லுவது பழைய பேண்ட் வாத்தியமாய்டுச்சு. இன்னைக்கி Samsung Note, S3, S4 னு பாத்ரூம் கண்ணாடி சைஸ்க்கு வைச்சுருக்கது தான் ஹைடெக் ஹார்மோனியம். போன வருசம் ஹார்மோனியாமா இருந்த போன் இப்போ ஏன் “Cheap Phone.. Chill Chill” னு ஆச்சு?
ஏன்னா இப்போ உங்ககிட்ட இருக்கும் போன்ல அதிகமா மூணு மெகா பிக்ஸல் இருக்குது., பெரிய Screen இருக்குது, பல GB ஸ்பேஸ் இருக்குது, ஆப்ப்ஸ் இருக்குது.,
நிற்க..,
எல்லாம் சரி., போன் வேகமும், திறனும் அதிகமா இருந்தாலும்.. நீங்க அத வைச்சு என்ன செய்றீங்கனு பார்ப்போமா?
- 3G Browsing
- Facebooking
- Tweeting
- Youtube
- Racing, Running, Jumping / Flying Games
- Email Checking
- Chatting
- SMS
- Phone Calling
நாம செய்யுற வேலை என்னமோ ஒண்ணு தான்., ஆனா அதை போன வருசம் இருந்த Android போன்லயே செய்ய முடியும். அப்புறம் எதுக்கு இந்த பச்சத் தண்ணி குடிச்சுட்டு பல்லு குத்துற வேலை?
போன் தயாரிப்பு நிறுவனங்கள் நம்மை ஏமாற்ற., 1Ghz ல ஒரு போன், 1.5 Ghz ல ஒரு போன். அட போன்ல எதுக்குப்பா Dual Core, Quad Core ப்ரோஸெஸர்? இந்த App ஸ்டோர்ல பத்து லட்சம் அப்பிலிகேசன் இருக்கு தெரியுமா? நீ இன்ஸ்த்தால் பண்ணப் போறது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான்.
நான் என்னா சொல்லுறேன்னா… OMNI யே நல்லா தானே ஓடிக்கிட்டு இருக்கு அபப்ரோம் எதுக்குப்பா எனக்கு Innova வேணும்னு சொல்லுறீங்க?
” என் கிட்ட காசு இருக்கு நான் வாங்குறேன்…. அனுபவிக்கணும் பா ”
ஆடம்பரம் என்பது நாம் விலைக்கு வாங்கும் வறுமை. எளிமை என்பது என்றும் இருக்கும் செல்வம்.
Innova ல பல நல்ல Features இருக்கலாம்… ஆனால் போன வருசம் உங்க கிட்ட இருந்த போனுக்கும் இப்போ இருக்குற போனுக்கும் பெரிய வித்தியாசம் எப்பவுமே இருக்காது. வெற்று ஆடம்பரத்தை தவிர.
அது மட்டும் இல்ல., கீழே விழுவது, தொலைவது, திருட்டுப் போவது போன்ற சம்பவங்கள் நடப்பதால் அநியாயமா 20000, 30000 இழப்பது எனக்குப் பிடிக்காது. என்னாது.. போனுக்கு இன்சூரன்ஸ் போட்டுக்கலாமா? இன்சூரன்ஸ் என்பதே ஒரு பெரிய திருட்டு வேலை என்பது பத்தி வேற ஒரு பதிவுல விளக்கமா சொல்லுறேன்.
Comments are closed.