21ம் தேதி ஒண்ணுமே நடக்காம இருந்தாலும் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்!

596

 2,256 total views

 • 666 னு தலைல எழுதி கொம்பு வைச்ச குழந்த பிறந்துருக்கு
 • பெருமாள் கண்ண திறந்து பார்க்கப் போறாரு
 • 2000 வருசம் பிறக்கப் போவுது.

இந்த மூணு சப்ப காரணங்கள் & அறிவில்லாத புரளிகளை பலரும் நம்பினர். என் கண் முன்னே ஆடு கோழிகளை விற்று நன்றாக குடித்துவிட்டு அடுத்தநாள் ஒண்ணும் நடக்காம காமெடி ஆன பல பேர பார்த்துருக்கேன்.

இந்த முறை பிரச்சனைகள் வரும் என சொல்வதும் அறிவியாளர்கள். பிரச்னை வராது என சொல்வதும் அறிவியலார்கள். இந்த மாயன் நாள் காட்டி பற்றி எவருமே பயப்படவில்லை இந்த முறை.

December 21 முக்கியமான நாள்:  காரணங்கள்

 1.  சூரியக் குடும்பம் பால் வெளியின் மத்திய ரேகையை தொட 26000 வருடங்கள் ஆகும். வரும் 21ம் தேதி இது அந்தப் புள்ளியை அடைகிறது.
 2. மாயன் நாள்காட்டி ஏற்கனவே 3 முறை முடிந்துள்ளது. இது நான்காவது முறை. இது சூரியன் பால் வெளியின் மைய ரேகையை அடையும் ஒரு Count Down போன்றது.
 3. மாயன் இனதிற்கு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்தவர் கிழக்கில் இருந்து வந்தவர் என குறிப்புகள் உள்ளது. அவர் 27 நாட்கள் கிழக்கே கடலில் சென்றால் அவரின் இருப்பிடம் உள்ளது. அவர் ஒருவேளை சூமேரியர், தமிழர் அல்லது வேற்று கிரக வாசி.
 4. சூரியனின் வட தென் துருவங்கள் இடம் மாற உள்ளன
 5.  பூமியின் வட தென் துருவங்களும் இடம் மாற உள்ளன.
 6. கண்ணுக்குத் தெரியாத (Infrared மூலம் மட்டுமே காணக் கூடிய) நிபுரு கிரகம் பூமியின் பாதையை நெருங்கி வர உள்ளது. இது மிக மிக வேகமாகப் பயணிக்கும் ஒரு கிரகம். இதை ஆராய நாசா (நாராயண சாமி அல்ல) அனுப்பிய Infrared telescopic satelite ஒழுங்காக வேலை செய்யாமல் திரும்பி வந்துவிட்டது.
 7. அமெரிக்காவில் Denver எனும் நகரத்தில் புதிய விமானநிலையம் 1995 இல் கட்டப்பட்டது. அதன் அடியில் பல மீட்டர் ஆழத்தில் ஒரு நகர மக்களே முழுவதும் தங்கும் அளவில் ஒரு ரகசிய காப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
 8. சுவீடன் நாட்டில் அனைத்து மரம் செடி கொடிகளின் விதைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. ஒரு வேலை உலகம் அழிந்தால் மீண்டும் உருவாக்க.

மாயன் சாதாரண மக்கள் இல்லை:

1. மாயன் வணங்கும் மரணத்தின் கடவுள் பால் வெளியின் மையத்தில் உள்ள ஒரு இருண்ட பகுதியில் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். இருளுக்கும் சிவனுக்கும் சம்பந்தம் உண்டு.

2. அப்போகலிப்டொ படத்தில் மாயன் இன மக்கள் அதிகமாக நரபலி கொடுக்கும் கொடூர் போலவும் அவர்களை ஸ்பேயின் ராணுவம் இறுதியில் வந்து சேர்வது போலவும் இருக்கும். உண்மை வரலாற்றில் பெரும் மாயன் இனக் கூட்டத்தை ஒரே இரவில் கொன்று குவித்த பெருமை இந்த ஸ்பேயின் ராணுவதையே சாரும்.  இதே ஸ்பேயின் ராணுவம் Pirates of the Carriebian 4  படத்தில் ஒரு கோவிலை அழிப்பது போல் காட்டி இருப்பர்.  அடிப்படைவாத  மதவாதிகள் (இந்து, இஸ்லாம், கிறிஸ்து, புத்தம்) அனைவரும் அடுத்தவரின் மதத்தை மதிப்பதில்லை. ஸ்பேயின் ராணுவம் செய்ததில் தவறில்லை என சப்பைக் கட்டு கட்டும் விதத்தில் பல துறைகளில் சிறந்து விளங்கிய மாயன் நாகரீகத்தின் ஒரே ஒரு மூடப் பழக்கமான  நரபலியை மட்டும் படம் முழுவதும் காட்டி அவர்களின் மீது ஒரு போது வெறுப்பு வருமாறு செய்திருப்பார் இயக்குநர் Mel Gibson.  The passion of the christ படம் பார்த்தாலும் உங்களுக்கு எசுவை கொன்ற இனத்தின் மீது ஒரு பெரும் வெறுப்பு வருமாறே அவர் படம் இயக்கியுள்ளார். இந்த Mel Gibson ஒரு அடிப்படை வாத Christian.

3.  மாயன் மக்களுக்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் தொடர்பு இருப்பது போன்ற பல பல சிலைகள் உள்ளன.
4. மாயன் மக்கள் வணங்கிய கடவுளின் கையில் பாம்பு இருக்கும். பாம்பு என்பது கிறிஸ்து மதத்தில் சாத்தான். இந்துக்கள் தெய்வம் பாம்பு.

5. மாயன் மக்களின் கட்டிடங்களுக்கும் பல்லவ (மாமல்லபுரம்) கட்டிடங்களுக்கும் உருவ ஒற்றுமை உண்டு.

மாயனும் தமிழர்களும்:
1. நான் சொல்வதை விட, ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் சொன்னால் நீங்கள் நம்புவீர்கள்.
Author Name: Gene D. Matlock
Link for Reference: http://viewzone2.com/ancientturksx.html

21ம் தேதி நடக்க வாய்ப்புள்ள விசயங்கள்:

1. ஒரு வேளை ரெண்டு நாள் தள்ளிக் கூட எதுவும் நடக்கலாம்.
2. எரி கற்கள் சில பூமியின் மீது விழலாம்.. சிறிய அல்லது பெரிய கற்கள்.
3. மின் காந்த பதிப்பு ஏற்பட்டு மின் சாதனங்கள் பழுதாகலாம்.
4. பறவைகள், மீன்கள் வழிததவறிப் போகலாம்.
5. மின் காந்த அலைகளால் அனைத்து மனிதர்களும் மிகவும் நல்ல மனிதர்களாக மன மாற்றம் பெறலாம். (இது கொஞ்சம் பேராசை தான்)
6. நாம் எதிர்பார்க்காத ஏதோ ஒன்று நடக்கலாம்

உங்களுக்கு ஒரு ரெண்டு மணிநேரம் இருந்தால் இந்த விரிவான தொகுப்பை படியுங்கள். சில இடங்களில் அவர் Buildup கொடுத்திருப்பார். நீங்கள் விசயத்தை மட்டும் பாருங்கள். உலகம் அழியவில்லை என்றாலும் நீங்கள் சரித்திர உண்மைகளை அறிந்திருப்பது முக்கியம்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85866/language/ta-IN/article.aspx

என் கருத்து:

என்னைப் பொருத்தவரை உலகம் ஏற்கனவே அழிந்துகொண்டு தான் வருகிறது. இந்த வருடம் மட்டும் மிக மிக அதிக எண்ணிக்கையில் பூகம்பம் மற்றும் புயல்கள். மதுரையில் நில நடுக்கம். வேகமாக மனிதன் தன் பங்கிற்கு பலவித விலங்கு பறவை மீன் இனங்களை வாழ வழி இல்லாமல் செய்து வருகிறான்.

21ம் தேதி ஒண்ணுமே நடக்கலனாளும் அடுத்த 40-60 வருடங்களில் எவருமே வாழத் தகுதியில்லாத இடமாக இந்தப் புவியை மனிதனே மாற்றுவான். 400 வருட கால அறிவியலும் 50 வருட கால கணினியின் அசுர வளர்ச்சியும்.. ஆயிரமாயிரம் வருட விவசாய, கலை, சித்தா, கட்டிட வடிவமைப்பு அறிவுக் களஞ்சியங்களை துச்சம்மென சொல்லும் இந்த சம கால தமிழினம் அதன் உச்சத்தை எப்போதோ அடைந்துவிட்டது.

மிக மிக உச்சத்தில் இருப்பவன் அடுத்து செல்லக் கூடிய இடம் இறக்கத்தில் இருக்கும் சரிவு தான்.  தமிழினம் அதன் பெருமைகளை இழந்து வருவது இதனால் தான்.

பின் குறிப்பு: நாசா, அமெரிக்கா, ஐ நா, நாராயண சாமி, சுப்பிரமணிய சாமி  என எல்லாரும் ஒரே ரகம் தான்.

 

 

You might also like

Comments are closed.