783 total views
சமீபத்தியமாக டெஸ்லா ஆட்டோ பைலட் அம்சத்தை அறிமுகபடுத்தியதிலிருந்தே டெஸ்லா நிறுவனத்தின் குழுவினர் சர்வதேச ஒழுங்குமுறை அப்ரூவலை பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்படி பெற்று விட்டால் டெஸ்லாதான் அமெரிக்கா நாட்டில் உலவிக் கொண்டிருக்கும் வாகனங்களிலேயே சிறந்ததாக இருக்கும் என கூறியிருந்தனர். தற்போது ஒழுங்குமுறை ஒப்புதலை பெற்ற சந்தோசத்தில் உள்ளனர் டெஸ்லா நிருவனத்தினர்.
மேலும் ஆட்டோ பைலட் 1.01 உடன் மிகவும் மேம்படுத்தப்பட்ட கூடுதல் அம்சங்களுடன் சிறந்த லேன் ட்ராக்கிங் மற்றும் மேடு பள்ளங்களில் கையாளக்கூடிய வேகக்கட்டுப்பாடுகள் போன்றவற்றுடன் சர்வதேச ஒப்புதல் தரத்தையும் கூடிய விரைவில் வாடிக்கையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தும் என டெஸ்லாவின் CEO திரு இலான் மஸ்க் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பால் மக்கள் பலர் இதனை நம்பிக்கையுடன் தைரியமாக வாங்குவர் என எதிர்பார்க்கலாம்.இந்த ஒப்புதல் உலகநாடுகளில் ஜப்பானைத் தவிர அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஜப்பானுக்கும் கொண்டு வரும் முயற்சியில் உள்ளது.
டெஸ்லாவின் பாதி தானியங்கு காரின் அம்சத்தால் ஆட்டோ ஸ்டீரிங் அமைப்பில் வாகனத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளது . MODEL-S ல் ஓட்டுனரின் சிக்கலான குழப்பத்தின் போது அதன் நில பயன்பாட்டினை வரைபடத்தில் காட்டப்படும். இதனால் ஆட்டோஸ்டீரிங் அமைப்பில் வாகனத்தை ஓட்டுபவர்கள் காரை நடத்துனர் போல போக்குவரத்து நெரிசல்களில் வழிகாட்டினால் போதுமானது. நிச்சயமாக சர்வதேச ஒப்புதலை பெற்றதால் மக்கள் அனைவரும் இந்த பாதுகாப்பான காரை எந்தவித பயமுமில்லாமல் வாங்குவர்.
Comments are closed.