குடிகார நட்சத்திரம் :

682

 840 total views

ஆமாம்.. மனிதர்களா மட்டும்தான் குடிக்கமுடியுமா ? நாங்களும் குடிப்போம் என்பதை நிருபித்துள்ளது. லைவ் ஜாய் வால்மீன். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிர்ச்சியான வால் நட்சத்திரத்தை கண்டறிந்துள்ளனர்.விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் புதிய உற்று நோக்குதலின் படி இந்த கண்டுபிடிப்பு முதன் முதலாக லைவ்ஜாய் வால் நட்சத்திரத்தில் எத்தில் ஆல்கஹால் இருக்கும் அதிர்சியூட்டும் இந்த தகவலை  கண்டறிந்துள்ளனர்.
இதில் ஆல்கஹால் , சக்கரை உட்பட 21 கரிம மூலக்கூறுகளை உள்ளடக்கி அண்டத்தை சுற்றி வருகிறது. இந்த லைவ்ஜாய் வால் நட்சத்திரத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் 2014ல் உற்று நோக்கினார். 30 மீட்டர் தொலைநோக்கியை வைத்து கண்டறிந்துள்ளனர். அதிலிருந்து அடுத்த கட்டமாக இந்த வால்நட்சத்திரத்திலுள்ள கரிம மூலக்கூறுகள் மேகத்திலிருந்து வந்ததா அல்லது சூரியக் குடும்பத்திலிருந்து உருவாகிறதா அல்லது பிறகு வேறு காரணங்களினால் உருவாகிறதா என்பதை கண்டறிய உள்ளனர்.

iram-30m-nbiver-20150917

இது வால் நட்சத்திரத்திலே மிகப் பிரகாசமானது. ஜனவரி மாதம் அதன் அணுகுமுறை சூரியனை நோக்கி செல்கையில் அது நொடிக்கு 20 டன் தண்ணீர் மற்றும் மற்ற கரிம மூலக்கூறுகளையும்  உமிழுகின்றன.அதனால் இந்த வால்நட்சத்திரம் சூரியனின் எல்லைக்குள் குறிப்பிட்ட தூரத்தில் சென்ற பின் அதன் கதிரியக்க ஆற்றலை குறிப்பிட்ட மைக்ரோ அதிர்வெண்களில் குவிக்கத் தொடங்குகின்றன.

தற்போது ஆல்கஹால் போன்ற கரிம மூலக்கூறுகள் இருப்பதால் தானோ என்னவோ அது நாடு வானில் சந்தோசமாக சுற்றி வலம் வருகிறது. அப்படியே பொறுத்திருந்து மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஏதேனும் மூலக்கூறுகள் ஏதேனும் கிடைக்கிறதா என காணலாம் .

You might also like

Comments are closed.