USB driveகளை format செய்வதற்கு…
2,486 total views
நம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச் செல்லப் பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD, DVD, Pen Drive, Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள driveகளை virus அல்லது வேறு சில காரணங்களினால் format செய்ய நேரிடும். அப்போது virus பிரச்சினையின் காரணமாக format செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்படுவதால் format செய்ய இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எளிய மென்பொருள் உள்ளது.
Disk Formatter என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்த மென்பொருளை open செய்ததும் தோன்றும் windowவில் format என்ற button அழுத்தி format செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருள் வெறும் 50kb அளவு உடையது ஆகும். மேலும் FAT32 and NTFS formatகளை உடையது ஆகும். பதிவிறக்கம் செய்ய :
http://www.softpedia.com/get/System/Hard-Disk-Utils/HP-USB-Disk-Storage-Format-Tool.shtml
எந்தவித மென்பொருளும் இல்லாமல் கணணியில் நிறுவியுள்ள இயங்குதளங்களின் மூலமாகவே USB driveகளை format செய்து கொள்ள முடியும்.
முதலில் Start->Rum->cmd என்று தட்டச்சு செய்து command prompt open செய்ய வேண்டும். பின் My computer open செய்து drive எந்த கோலன் என்பதை குறித்துக் கொண்டு command promptல் format என type செய்து F:G:H:I:J: இது போல எந்த கோலன் என்பதை Format கோலன், உதரணாத்திற்க்கு G: கோலன் என்றால் format g: என்று type செய்து Enter Keyயை அழுத்தவும்.
அடுத்ததாக format செய்ய Enter கீயை அழுத்தச் சொல்லும். அதன் பின் Enter கீயை அழுத்தவும்.
அழுத்தியவுடன் formatடாக தொடங்கும். ஒரு சில வினாடிகளில் format ஆகிவிடும். விரும்பினால் driveக்கு வேண்டிய பெயரை இங்கேயே எழுதலாம். அவ்வளவு தான் இனி driveகளை format செய்வது எளிதாகும்.
Comments are closed.