PDF Edit: PDF கோப்புகளை எடிட் செய்வதற்கு…..
2,413 total views
Adobe நிறுவனம் வரையறை செய்து வழங்கும் Portable Document Format-ல்(PDF) கோப்பு ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.
ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும்.
இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல PDF programmeகள் இலவசமாகக் கிடைக்கின்றன.
Original document-ன் அனைத்து சிறப்பு இயல்புகள், foramtting அம்சங்கள் அனைத்தும் FDF Format-ல் அப்படியே காட்டப்படுகிறது.
Text, Image, Multi Media மற்றும் பல அம்சங்கள் PDF Format-ல் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுச் சொல் கொண்டு ஒரு PDF கோப்பை பாதுகாக்கலாம்.
எந்த ஒரு இயங்குதளத்திலும் இந்த PDF Format-ல் உள்ள கோப்பைக் காண முடியும். இந்த கோப்பை edit செய்திட ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
1. PDF Edit: இது ஒரு open source மற்றும் மிகக் குறைவாக இடம் பிடிக்கும் programme. Document ஒன்றில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கவும், அப்படி அமைத்த மாற்றங்களுடன் கோப்பை சேவ் செய்திடவும் இந்த புரோகிராம் வழி தருகிறது.
இந்த தொழில் நுட்பம் தெரிந்த பயனாளர்கள், இதில் கிடைக்கும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ்(GUI Graphical User Interface) வசதியைப் பயன்படுத்தி, பி.டி.எப். ஆப்ஜக்ட்களையும் மாற்றி அமைக்கலாம்.
இந்த புரோகிராமினை விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் இயங்குதளத்தில் இயங்கும் கணணியில் இயக்கலாம். பதிவிறக்கம் செய்ய முகவரி http://sourceforge.net/projects/pdfedit/
Comments are closed.