கல்வித்துறையில் காலடி பதித்துள்ள மைக்ரோசாஃப்ட்டின் மைன் கிராஃப்ட் :
755 total views
இதற்குமுன் சில பி.சி கேம்களை இராணுவத்துறையில் உருவகபடுத்துதல்கள் மற்றும் பயிற்சி நோக்கின் அடிப்படையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கல்வித் துறையில் மைக்ரோசாப்ட் விளையாட்டு வழி கற்றலை புகுத்தியுள்ளது.இதனை கல்வி துறையில் புகுத்துவதன் மூலமாக மாணவர்கள் உலகின் வெவ்வேறு பகுதிகள், வரலாற்று நினைவு சின்னங்கள், பழங்காலத்து நகரங்கள் போன்ற அனைத்தையுமே துல்லியமாக மறு உருவாக்கம் செய்யலாம் அதன் மூலம் கற்பித்தலை எளிமையாக்குவதையே மைக்ரோசாப்ட் நோக்கமாக கொண்டுள்ளது. இதில் வரலாறு, கலை, கணிதம், அறிவியல்,பொறியியல் போன்ற பாடங்கள் அடங்கிய நூலகம் ஒன்று உள்ளது. இதில் தொடக்க கல்வி, இடை நிலைகல்வி, உயர் நிலை கல்வி போன்று அனைத்து வயதினருக்கும் ஏற்ற பாடங்களும் படிப்படியாக தரப்பட்டுள்ளன. மைக்ரோசாஃப்ட்டின் மைன் கிராஃப்ட் திட்டத்தின் மூலமாக ஆசிரியர்கள் அவர்களது கேமின் உள்ளடக்கங்களினை அவரவர் கல்வித் தேவைக்கேற்றார் போல மாற்றியமைத்து பயன்பெறலாம். இதனால் கல்வியை வெறும் மனப்பாடம் செய்து விட்டுப் போகாமல் நடைமுறையாக அனுபவத்தில் கற்பதால் அறிவு பெருகும் மேலும் அவர்களுக்கு கற்றல் ஆர்வமும் பெருகும். இன்றைய உலகில் அனைத்து குழந்தைகளும் பி.சி கேம்களில் வைத்திருக்கும் ஆர்வத்தினை படிப்பில் செலுத்துவதில்லை. இதுபோன்ற விளையாட்டு வழி கற்றலால் அனைத்து குழந்தைகளுக்கும் கற்றலை மகிழ்ச்சியுடன் தரலாம்.கேமிங் துறையின் இந்த படைப்புகள் சிறந்த கேமிங் அனுபவத்தைத் தொடர்ந்து கல்வியில் வழங்குவதில் முனைப்புடன் இயங்கி வருகின்றது. மைன்கிராஃப்ட்டி
கூடுதலாக சேர்க்கவுள்ள அம்சங்கள்:
- விளையாட்டின் போது குழந்தைகளால் உருவாக்கம் செய்யப்படும் கதாபத்திங்களையும் நாடகங்களுக்குள் கொண்டு வருவது.
- இதிலிருக்கும் கேம் கேமரா மூலம் மாணாக்கர்கள் அவர்களது செயல்முறைகளையும் குறிப்புகளையும் போட்டோ எடுத்து கணினியில் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் அது மற்றவர்களுக்கு நல்ல பயிற்சியாகவோ அல்லது மாணவர்களின் செயல்முறைக்கு ஆசிரியர்கள் வழங்கும் மதிப்பெண் திட்டமாகவோ செய்யப்படலாம்.
- மேலும் இந்த மென்பொருளை மானவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலமாக கேம்களை பள்ளி வளாகத்திற்கு வெளியேயும் விளையாட அனுமதிக்கலாம்.
- இந்த சேவையை துவங்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய இருவருக்கும் own Office 365 ID யைப் பெற்றிருக்க வேண்டும். இந்த சேவைக்கு மைரோசாப்ட் ஆண்டு கட்டணமாக ரூ .340-யை நிர்ணயித்துள்ளது.
ஏற்கனவே, 40 நாடுகளில் 7,000 வகுப்பறைகளில் உலகெங்கும் இன்று ஒரு பகுதியாக மைன்கிராஃப்ட் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை தற்போது அறிமுகபடுத்தவுள்ள மைன்கிராப்ட்டின் சொந்த பதிப்பினால் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கேமிங் துறையின் இந்த படைப்புகள் சிறந்த கேமிங் அனுபவத்தைத் தொடர்ந்து கல்வியில் வழங்குவதில் முனைப்புடன் இயங்கி வருகின்றது. மைன்கிராஃப்ட்டி
Comments are closed.