நொடிப் பொழுதில் விற்றுத் தீர்ந்த மைக்ரோசாஃப்ட்டின் டிக்கெட்டுகள்!
551 total views
மைக்ரோசாப்ட் மார்ச் 30முதல் ஏப்ரல்1 வரை நிகழ்த்த உள்ள அதன் மாநாட்டு கூட்டத்திற்கான டிக்கெட்டுகள் நொடிப்பொழுதில் சரமாரியாக விற்றுத் தீர்துள்ளது. கடந்த வருடம் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகளின் சாதனையை முறியடிக்கும் வண்ணம் இம்முறை ஒரு நிமிடத்திலேயே விற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும் இன்னும் டிக்கெட்டுகள் கிடைக்காத பல டெவலப்பர்கள் காத்திருப்பு பட்டியலில் பதிவு செய்து வருகின்றனர். இந்த மகிழச்சிகரமான செய்தியை மைக்ரோசாப்ட் தற்போது வெளியிட்டுள்ளது. கூடவே இம்முறை மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த மாநாட்டில் மைக்ரோப்சாப்ட்டின் வருங்காலத்திய தயாரிப்புகளும், கிளவுட் சேவைகள், விண்டோஸ் 10 மென்பொருள்களைப் பற்றிய கண்ணோட்டங்களும் காட்டப்பட உள்ளன .கடந்த வருடம் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக HP notebook வழங்கப்பட்டது. டிக்கெட்டுகளை $2,095 லிருந்து $2,195 ஆக உயர்ர்த்தியுள்ள நிலையில் வரலாற்றிலேயே டிக்கெட்டுகள் ஒரு நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தது இதுவே முதல் முறையாகும்.
Comments are closed.