கணிதம்,அறிவியல் எதை வேண்டுமானாலும் இலவசமாக பயிலுங்கள் இணையத்தின் வழியே

501

 1,338 total views

சேவையில் சிறந்தது கல்வியை பயிற்றுவிப்பது. அது இலவசமாக அனைவருக்கும் கிடைக்குமெனில் அதை விட பெரிது எதுவும் இல்லை. இதோ அதையும் இந்திய பாரம்பரியத்தை சேர்ந்த சல்மான் கான் செயல்படுத்தி வருகிறார்.

தன்னுடைய உறவினர்களுக்கு இனையத்தின் வாயிலாக பாடங்களின் சந்தேகத்தை தீர்த்து வந்த இவர், அவர்களுடைய யோசனையின் பேரில் அனைவருக்கும் பயன்படும் வகையில் Youtube ன் வழியாக வீடியோவாக ஒளிபரப்ப செய்தார்.

இன்று கணிதம், வணிகவியல், அறிவியல் என 2400 பாடங்களை கொண்டுள்ள பேசும் நூலகமாக http://www.khanacademy.org/ விளங்குகிறது.

இது உங்கள் குழந்தைகள் பாடங்களை கற்றுக்கொள்ள சிறந்த தளமாகும். ஏன் நீங்களும் உங்கள் புத்திக் கூர்மையை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

இது எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது ?

  1. எந்த பாடத்தை வேண்டுமானாலும் நீங்கள் நினைத்த நேரத்தில் கற்றுக்கொள்ளலாம்
  2. உங்கள் சந்தேகங்களை அப்பொழுதே கேட்டு அதற்கான விடையை தெரிந்துகொள்ளலாம்
  3. யாரிடமும் சென்று உதவி கேட்க தேவையில்லை
  4. முக்கியமாக இங்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் ஒரே பாடத்தை புரியும் வரை திரும்ப பார்த்துக்கொள்ளலாம். 🙂

You might also like

Comments are closed.