உங்களை மிகவும் கவரக்கூடிய பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் யோசியுங்கள் நண்பர்களே!

868

 1,190 total views

நமக்கு பார்ததுமே பிடித்தமான பயன்பாடுகளை  உடனடியாக பதிவிறக்கி  பயன்படுத்துவதையே   வழக்கமாக கொண்டிருப்போம் . ஆனால் அவ்வாறு செய்வதனால் ஏற்படும் விளைவுகளால்  நமது சாதனம் வைரஸ் தாக்குதலுக்கு உட்படுகிறது மேலும் சொந்த தரவுகளும் திருடப்படலாம். கிட்டத்தட்ட 9 % மிக பிரபலமான பயன்பாடுகள், அனைத்துமே கூகுள் பிளேயிலிருந்தே பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் தற்போது கூகுள் பிளேயிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 13,500 இலவச அன்ட்ராய்டு பயன்பாடுகள் பதிக்கப்பட்ட URLகளை பற்றிய பெரிய அளவிலான ஆய்வுகளை நடத்தின.

சோதனை செய்யப்பட்ட அனைத்தும் பிரபலமான சமூக ஊடகங்கள் மற்றும்  மக்கள் அதிகம் பயன்படுத்திய ஊடகங்கள் மற்றும் மிகத்திறமை வாய்ந்த டெவலப்பர்கள் உருவாக்கிய பயன்பாடுகள் போன்றவையே! AURA (Android URL Risk Assessor) என்ற அன்ட்ராய்டு URL   பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்டு இந்த குழு73,500 பயன்பாடுகளை  அணுக  2,50,000 URL களை பயன்பாடுகளை அணுகி  சோதனையிட்டுள்ளது. இவற்றின் நம்பகத்தன்மை வைரஸ் டேட்டாவை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குழு தற்போது பாதுகாப்பான தீங்கிழைக்காத பயன்பாடுகளை மட்டும் பதிவிறக்கம் செய்யும் யுக்தியை உருவாக்கி வருகின்றனர். இந்த குழுவினர் டிசம்பர் 8 அன்று அவர்களது கண்டுபிடிப்பை அமெரிக்காவின்  IEEE குளோப் கேம் மாநாட்டில் முன் வைக்க உள்ளனர் . இதன் பின் இந்த கருவியை பயன்படுத்தி  பதிவிறக்கம் செய்வதற்கு முன் ஏற்படும் வைரஸ் தாக்குதலிலிருந்து காக்கலாம் .  மேலும்  ஒரு பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்வதற்கு முன் அதிலுள்ள சிக்கல்களை தெரிவிக்க கூடிய வகையில் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Comments are closed.