கூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை :

1,592

 2,695 total views

கூகுள்  நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செயலியை  வெளியிட்டுள்ளது.    இதில்  Allo என்பது  ஒரு குறுந்தகவல் செயலியாகும். மற்றும் Duo என்பது ஒரு  மிக குறைவான நெட்வொர்க் தளத்திலும்  செயல்படக்கூடிய  வீடியோ காலிங் செயலி ஆகும் .  இதற்கு முன் இது போன்ற குறுந்தகவல் செயலிகள் மற்றும் வீடியோ காலிங் செயலிகள் என  பல இருந்தாலும் இவை அதிலிருந்து சற்றே வித்தியாசமான நூதன அம்சங்கள் சிலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளன.  Allo மற்றும் Duo  செயலியால் பேஸ்புக் மெசெஞ்சர் ,  ஸ்கைப்,  வைபர் மற்றும்  IMO , மற்றும் பல போன்ற பயன்பாடுகள் மீது  ஒரு போட்டியை ஏற்படுத்தும்  என எதிர்பார்க்கப்படுகிறது.
Allo:
            Allo அடிப்படையில் ஒரு சாதரணமான குறுந்தகவல் செயலி  ஆகும்.  இவை ஒருவருக்கு வரும் பதிலுக்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி   ஸ்மார்ட் பதில்களை பரிந்துரை  செய்கிறது.   மேலும் குறுந்தகவல்களின் அளவுகளையும்  நமக்கு பிடித்தாற் போல் மாற்றிக் கொள்ளலாம். மேலும் புகைப்படங்களின் மேல் எழுதிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்படுகிறது.  மேலும் முக்கியமான நிகழ்வுகள், உணவகங்கள், பயணங்கள் போன்றவற்றினை குறுந்தகவல் செயலியினை  விட்டு வெளியேறாமலே “Search” செய்து கொள்ளலாம்.
Duo:
    இது ஸ்கைப், வைபர் போன்றவற்றைப் போன்றே   ஒரு வீடியோ காலிங்  செயலியே . ஆனால் வீடியோ காலிங் சேவையில் இதுவரை இல்லாததொரு ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுள்ளது.  அது என்னவென்றால்  வீடியோ காலிங் செய்கையில் எதிர் முனையில் அழைப்பவரின் வீடியோக்கள் முன்னோட்டத்துடன்  அடுத்த முனையில் இருப்பவருக்கு காட்டப்படும்.  இதனால் பாதுகாப்பு கருதி வீடியோ காலிங் செயலியை பயன்படுத்துபவர்களின்  எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த இரு செயலிகளும்  கோடை முடியும் முன் வெளியிடப்படும் என கூகுள் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Comments are closed.