அமெரிக்க நிறுவனங்களை சைபர் தாக்குதல் செய்த இரண்டு இஸ்ரேலியர்கள்:

710

 2,421 total views

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள்  மீது பல விதமான இணையவழி தாக்குதல்கள் நிகழ்த்திய இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் மீதான 2015 நவம்பரிலிருந்து நியுயார்க் – மான்கட்டன்  நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கேரி சலோன் , ஜிவ் ஆரன்ஸ்டைன் இருவரும் இந்த வாரம் இஸ்ரேலிலிருந்து நாடுகடத்தப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

              அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்ததாவது, கடந்த 2007 ஆம் ஆண்டு இவர்கள் நடத்திய நிதி திட்டம், வழி  சூதாட்ட விடுதிகள் கருப்பு பண பரிமாற்றங்கள் , பிட் காயின் பரிவர்த்தன மோசடி , பங்குசந்தையில் சில நிறுவனங்களின் பங்குகளை திட்டமிட்டு விலையேற்றம் செய்தது. நிதி நிறுவனங்களின்  வாடிக்கையாளர் விவரங்களைத் திருடியது என 23குற்றச் சாட்டுகள் உள்ளன.  இவற்றில் சமந்தப்பட்ட 3வது குற்றவாளி  ஜோசுவா சாமுவேல் ஆரோன் தலைமறைவாக உள்ளான் தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்களில்  பிரபலமான J.P மார்கன் வங்கி , வாழ் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிக்கை , ஸ்காட் ட்ரேடு நிறுவனம் , இ-டிரேடு பைனான்ஸ்  நிறுவனம் ஆகியவையும் அடக்கம் . 75 போலி நிறுவனங்கள் பெயரில் உலகம் முழுவதும் 1000 வங்கி கணக்குகளை உருவாக்கி  கருப்பு  லான்ட்ரிங்க் செய்த இருவருக்கும் அமெரிக்க சட்டத்தின்படி இரண்டு முதல் இருபது ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
                                                                                                                               இப்படிக்கு

கார்த்திகேயன்

You might also like

Comments are closed.