15 ஆண்டுகளில் Download.COM

617

 3,097 total views

இலவசமாக software application வேண்டும் என்றால் நாம் அனைவரும் அணுகும் இணைய தளம் Download.com. பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இந்த தளம் கொண்டுள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் சார்ந்த software application தொகுப்புகளை மட்டும் வழங்கி வருகின்றன. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தளம் இலவசமாக சாப்ட்வேர் applicationகளைத் தரும் சேவையை தொடங்கி இன்றளவும் வெற்றி கரமாக இயங்கி வருகிறது. இதன் 15 ஆண்டு கால சேவையில் சில அரிய ஆர்வமூட்டும் தகவல்களைத் தன் தளத்தில் தெரிவித்துள்ளது இந்த இணையதளம். அவற்றில் சில தகவல்களைப் பார்க்கலாம்.

2011ஆம் ஆண்டில் download செய்யப்பட்ட programmeகளில் முதல் இடம் பெற்றிருப்பது இலவச ஏ.வி.ஜி. Antivirus programme. இந்த programme 2000 ஆண்டில் அறிமுகமானது. இதுவரை 38 கோடியே 43 லட்சத்து 31 ஆயிரத்து 367 முறை download செய்யப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் Avast Antivirus programme உள்ளது. இதனை 15 கோடியே 74 லட்சத்து 83 ஆயிரத்து 377 முறை டவுண்லோட் செய்துள்ளனர். CCleaner 19ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. Download செய்திடப் பயன்படுத்தப்பட்ட browserகளின் பங்கினைப் பார்க்கையில் எப்படிbrowser பயன்பாட்டுச் சூழ்நிலை மாறி வருகிறது என அறிய முடிகிறது. 1996ல் நெட்ஸ்கேப் பிரவுசர் 73% கொண்டு முன்னணியில் உள்ளது. அப்போது Internet Explorer பங்கு 20% மட்டுமே. Firefox எல்லாம் அப்போது இல்லை. 2011 ஆம் ஆண்டில் Internet Explorer 51% இடம் கொண்டுள்ளது. நெட்ஸ்கேப் இல்லவே இல்லை. அடுத்த இடத்தில் Mozilla Firefox 21% பங்கு கொண்டுள்ளது. Google Chrome 15% இடம் பிடித்துள்ளது.

You might also like

Comments are closed.