Screen saver உருவாக்குவதற்கு

716

 1,534 total views

விதவிதமான வீடியோ screen saverகளை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நாமே screen saverஐ உருவாக்கினால் எப்படி இருக்கும். நமக்கு விருப்பமான படங்கள், திரைப்பட பாடல்கள் என நமது கணினியில் வீடியோவாக ஒலித்தால் அருமையாக இருக்கும் அல்லவா?

அதற்கு இந்த சின்ன மென்பொருள் நமக்கு உதவி புரிகின்றது. இந்த மென்பொருளில் பதிவிடும் வீடியோவை நாம் முதலி்ல் .swf கோப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு உங்களிடம் Format Factory என்கின்ற மென்பொருள் இருக்க வேண்டும். இப்பொழுது உங்களிடம் உள்ள வீடியோ கோப்பை இந்த மென்பொருள் மூலம் .SWF கோப்பாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது WG SCREEN SAVER CREATER என்கின்ற மென்பொருள் தேவை. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய http://www.4shared.com/file/VNBp3vct/WG_Screensaver_Creator_10.html? Click செய்யவும். உங்களுக்கு ஒரு window open ஆகும்.

இதில் Add Files மூலம் தேவையான வீடியோ கோப்பை தேர்வு செய்யுங்கள். வீடியோ screen தேவையான அளவிற்கு set செய்யுங்கள். உங்களது வீடியோ அளவானது screenஐ விட குறைந்த அளவாக இருந்தால் வேண்டிய நிறத்தினை பின்புலத்தில் கொடுத்துக் கொள்ளலாம். இனி அதில் உள்ள Creator click செய்யவும். சில நிமிடங்களில் உங்களுக்கு ஒரு window open ஆகும். இந்த screen saverருக்கு உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம். இப்போது desktop வந்து காலி இடத்தில் வைத்து right click செய்யுங்கள்.

Display properties தேர்வு செய்து அதில் screen saver tabஐ click செய்யுங்கள். வரும் windowவில் நீங்கள் கொடுத்த பெயரினை தேர்வு செய்து apply கொடுங்கள். அவ்வளவுதான் நீங்கள் விரும்பிய பாடல் screen saverராக ஓட ஆரம்பிக்கும். இதனுடைய மூல கோப்பை நீங்கள் விரும்பிய நபருக்கும் கொடுக்கலாம்.

You might also like

Comments are closed.