இணையத்தில் தகவல்களை இலவசமாக சேமித்து வைப்பதற்கு!

779

 1,596 total views

இணையத்தில் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம்.

கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது virus தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம். Online மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம். இதற்க்கு உதவ ஒரு தளம் உள்ளது. தள முகவரி http://cdn.cloud.cm/index_main.html

இத்தளத்திற்கு சென்று Sign in என்பதை click செய்து நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நம் தகவல்களை பதிவேற்றலாம். தனித்தனியாக கோப்பறை அமைத்து வகைப்படுத்தியும் பதிவேற்றலாம். Audio, Video, Pdf என அனைத்து வகையான கோப்புகளையும் சேமிக்கலாம்.

எந்த நாட்டிற்கு சென்றாலும் இத்தளத்திற்குச் சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து எங்கிருந்து வேண்டுமானாலும் நம் தகவல்களை எடுக்கலாம். ஆண்டிராய்டு போனில் இருந்தும் பதிவேற்றலாம், பதிவிறக்கும் வசதியும், மேலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளது. 5GB வரை சேமிப்பதற்கு இடம் கொடுக்கும் இந்தத்தளம் தகவல்களை onlineல் சேமிக்க உதவும்.

You might also like

Comments are closed.