ஜனவரியில் அறிமுகபடுத்தவிருக்கும் மைக்ரோசாப்டின் சர்பேஸ் ப்ரோ4 கணினி பலகைகள்:

610

 903 total views

நவம்பர்  5ஆம் தேதியன்று மும்பையில் நடந்த  விழாவில் கலந்து கொண்ட மைக்ரோ சாப்ட்டின் தலைமை செயல் அதிகாரியான திரு சத்திய நாதெல்லா  எதிர்காலத்தில்  இந்தியாவில் அறிமுகபடுத்தப் போகும் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்.அதன் படி   சில நாட்களுக்கு  முன்னால் வெளியிட்ட  சர்பேஸ் ப்ரோ 4′ கணினி பலகையினை இந்தியாவில் வருகிற ஜனவரி முதல் வாரம் அறிமுகபடுத்த உள்ளனர்.

            இந்நிறுவனம் ஜனவரி -7   ஆம் தேதி  நடக்கவிருக்கும் நிகழ்வுக்கான அழைப்புகளை அனைவருக்கும் அனுப்பி கொண்டிருக்கின்றது.   இந்த நிகழ்வின்போதே மைக்ரோசாப்ட் அதன் சர்பேஸ் ப்ரோ4 ஐ அறிமுகபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுவே மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்ந்த  கணினிபலகைகளில்  இந்தியாவில் வெளியாகும் முதல் கணினி பலகை என மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரி திரு.சத்ய நாதெல்லா  தெரிவித்துள்ளார். சர்பேஸ் ப்ரோ 4 பெரிதாகவும் மெல்லிதாகவும் சர்பேஸ் ப்ரோ 3-யினை  விட  சிறந்த பதிப்பை கொண்டு தயாரித்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளனர்.
சர்பேஸ் ப்ரோ 4-ன் திரை  , 12.3 அங்குல அளவில்   வடிவமைக்கபட்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 2160×1440 பிக்ஸெல்கள் மற்றும் பிக்ஸெல்கள் நெருக்க அளவு 267PPI. இதில் PixelGlass என அழைக்கப்படும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கணினி பலகை 128GB,256GB,512GB, 1TB SSD போன்ற சேமிப்புகளில்  4GBராமுடன் வெவ்வேறு வகை   நினைவகத்துடன்  வரவுள்ளது. இதன் முதல்  வடிவமைப்பு மட்டும்  M3செயலி ,4GBராம் மற்றும் 128GB சேமிப்பை கொண்டு  வரவுள்ளது. மேலும் 8mp  பின் காமிரா மற்றும் 5MP  முன் காமிராவை கொண்டும்  வரவுள்ளது.   மைக்ரோசாப்ட்  சர்பேஸ் ப்ரோ 4 கணினி பலகைகளில்  விசைபலகைகளிக்கிடையே உள்ள பட்டன்களுக்கிடையே  அதிகளவு இடைவெளி இருப்பதால் டைப் செய்ய  எளிதாகவும் மற்றும் வேகமான டைப்பிங்கிற்கு  உதவும்படியும் உள்ளது.
* 128GB/ இன்டெல்  கோர்  m3/4GB  ராம் : Rs 67,999

 * 128GB/ இன்டெல் கோர்  i5/4GB ராம் : Rs 74,999
* 256GB/இன்டெல் கோர்  i5/8GB ராம் : Rs 95,999
* 256GB / இன்டெல் கோர்  i7/8GB ராம் : Rs 1,18,499
 * 256GB/இன்டெல் கோர்  i7/16GB ராம் : Rs 1,32,999
            ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையிலான கணினி பலகைகளின் விலை மதிப்பினை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.  இவையனைத்தையும் இந்தியாவில்  டிஜிட்டல் புரட்சியை மேற்கொள்ளும் விதமாகவே தொடங்கியுள்ளனர் .

You might also like

Comments are closed.