528 total views
நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக பூக்கும் தாவரங்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்க திட்டமிட்டுள்ளது .ஆராய்ச்சியாளரும் அதன் குழு உறுப்பினரில் ஒருவருமான கெஜல் வின்க்ரீனும் அவர்களும் இணைந்து தாவரத்தை விண்வெளியில் வளர வைக்கும் சோதனையை இந்த வாரம் திங்கள் கிழமையன்று நிகழ்த்தினர் . ஒரு வேளை இந்த சோதனையின் முடிவு வெற்றியில் முடிந்தால் இதுவே முதல் முறையாக சர்வதேச விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் பூக்கும் தவரமாக இருக்கும்.
ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனை மலர்கள் சூரிய ஒளிக்கு பதில் LED லைட்டுகளைப் பயன்படுத்தி வளர்க்கப்படுகிறது . 2017- க்குள் தக்காளி போன்ற காய்கறி வகைகளையும் சோதனைக் கூடத்தில் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் பசுமையான காய்கறிகளை உண்ணக் கிடைப்பதால் அவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சுற்று சூழலை உருவாக்கித் தரும் என நம்பலாம்.
விண்வெளி வீரர்கள் பொதுவாக விண்வெளிக்கு ஆராய்ச்சி மேற்கொள்ள செல்லும் போது அவர்கள் உணவிற்காக பதப்படுத்தப்பட்ட உணவினையோ அல்லது பேக் செய்யப்பட்ட உணவினையே எடுத்துக் கொள்வர். தற்போது இந்த பச்சைக் கீரைகள் வளர்ப்பு சோதனையில் வெற்றி பெற்றால் இனி பூமியில் சாப்பிடுவது போன்றே பசுமையான காய்கறி வகைகளை அவர்களும் உண்ணலாம்.
Comments are closed.